வெள்ளரி பச்சடி



என்னென்ன தேவை?

வெள்ளரிக்காய் - 3,
தயிர் - 1 கப்,
பச்சைமிளகாய் - 1,
இஞ்சி - 1 துண்டு,
உப்பு - தேவைக்கு,
கொத்தமல்லித்தழை - சிறிது,
தாளிக்க எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?


கெட்டியான தயிரை நன்கு கடைந்து உப்பு, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லித்தழை, துருவிய வெள்ளரிக்காய் சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெள்ளரி பச்சடியில் கொட்டி கலந்து பரிமாறவும்.