குல்ஃபிஎன்னென்ன தேவை?

பால் - 1 லிட்டர்,
பிரெட் - 2,
சர்க்கரை - 1/2 கப்,
துருவிய பாதாம், முந்திரி,
பிஸ்தா - தலா 1 டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - சிறிது,
குல்ஃபி எசென்ஸ் - சிறிது,
குல்ஃபி மோல்டு. - சிறிது,

எப்படிச் செய்வது?

பிரெட்டின் ஓரங்களை நீக்கி விட்டு சிறிது பாலில் ஊறவைத்து சர்க்கரைத்தூள், பாதி துருவிய நட்ஸ், மீதியுள்ள பால் கலந்து நன்கு அடிக்கவும். இக்கலவையை அடுப்பில் மிதமான தீயில் வைத்து கிளறி ஒரு கொதி விட்டு ஏலக்காய்த்தூள் கலந்து இறக்கவும். ஆறியதும் எசென்ஸ், மீதியுள்ள நட்ஸ் கலந்து குல்ஃபி மோல்டில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஃப்ரீசரில் 10 மணி நேரம் செட் செய்து பிறகு பரிமாறவும்.