ஃபலூடா



என்னென்ன தேவை?

வேகவைத்த சேமியா, வேகவைத்த ஜவ்வரிசி - தலா 1/2 கப்,
 சப்ஜா விதைகள் - 1 டீஸ்பூன்,
நறுக்கிய பழத்துண்டுகள் (விதையில்லாத பச்சை, கருப்பு திராட்சை, மாம்பழம், ஆப்பிள், வாழைப்பழம், பைனாப்பிள்) - அனைத்தும் சேர்த்து 1 கப்,
ரோஸ் சிரப் - 2 டீஸ்பூன்,
கன்டென்ஸ்டு மில்க் - 1/2 டின்,
வெனிலா ஐஸ்கிரீம் - 1 கப்,
பால் - 1 கப்.

எப்படிச் செய்வது?

சப்ஜா விதைகளை முதல் நாள் இரவே ஊறவைத்துக் கொள்ளவும். பாலை சுண்டக் காய்ச்சி ஆறியதும் ரோஸ் சிரப் சேர்த்து கலந்து கொள்ளவும். ஒரு உயரமான கண்ணாடி டம்ளரில் முதலில் சப்ஜா விதை, பிறகு ரோஸ் சிரப் கலந்த பால், சேமியா, ஜவ்வரிசி என ஒவ்வொரு லேயராக போட்டு மீண்டும் பால், நறுக்கிய பழத்துண்டுகள், அதன் மீது கன்டென்ஸ்டு மில்க், கடைசியாக ஐஸ்கிரீம் போட்டு பரிமாறவும்.