நெல்லி மோர்என்னென்ன தேவை?

நெல்லிக்காய் - 10,
தயிர் - 1 கப்,
இஞ்சி - 1 துண்டு,
பச்சைமிளகாய் - 1,
கொத்தமல்லித்தழை,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

நெல்லிக்காயை கொட்டையை நீக்கி தயிர், பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து அரைக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலையை சேர்த்து கலந்து குளிரவைத்து பரிமாறவும்.