சைனாகிராஸ் புட்டிங்என்னென்ன தேவை?

பால் - 1 லிட்டர்,
சர்க்கரை - 300 கிராம்,
சைனா கிராஸ் - 1 துண்டு (10 கிராம்),
எசென்ஸ் - சில துளிகள்,
பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி - சிறிது.

எப்படிச் செய்வது?


அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க வைத்து சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் பொடித்த சைனா கிராஸை போட்டு கிளறவும். சைனா கிராஸ் கரைந்ததும் இறக்கி ஆறவைத்து, எசென்ஸ் கலந்து பாதாம், முந்திரியை சேர்த்து புட்டிங் மோல்டில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்து பின்னர் எடுத்து பரிமாறவும். மேலே நறுக்கிய பழத்துண்டுகள் கொண்டு அலங்கரித்தும் பரிமாறலாம்.