மோர் கரைத்த தோசை



என்னென்ன தேவை?

மோர் - 1/2 லிட்டர்,
மைதா, ரவை, அரிசி மாவு - தலா 100 கிராம்,
உப்பு, பெருங்காயத்தூள் - தேவைக்கு,
பச்சைமிளகாய் - 4, கறிவேப்பிலை,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்,
தாளிக்க கடுகு - 1/2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா
1 டீஸ்பூன், எண்ணெய் - 100 மி.லி.

எப்படிச் செய்வது?

மோரில் அனைத்து பொருட்களையும் கலந்து, தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து கொட்டி கரைத்து கொள்ளவும். தோசைக்கல்லில்   எண்ணெய் விட்டு மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி திருப்பி போட்டு எடுக்கவும். அல்லது மேலே மூடி போட்டு மூடி வைத்து ஒரு பக்கத்தோடு எடுத்து பரிமாறவும். மைதாவிற்கு பதில் கோதுமை மாவிலும் செய்யலாம்.