ரவை தயிர் போண்டா
என்னென்ன தேவை?
ரவை - 100 கிராம், அரிசி மாவு - 100 கிராம், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 4, நறுக்கிய கோஸ், கேரட், வெங்காயம் - 1 கப், நறுக்கிய இஞ்சி, புதினா கலந்தது - 1 கப், தயிர் - 200 மி.லி., தேங்காய்த்துருவல் - 1/2 கப், பொரிக்க எண்ணெய் - 1/2 லிட்டர்.
எப்படிச் செய்வது?
ரவையை வறுத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் ரவை, அரிசி மாவு, காய்கறி கலவை, பச்சைமிளகாய், இஞ்சி, புதினா, உப்பு, தயிர், தேங்காய்த்துருவல் போட்டு கலந்து கெட்டியான வடை பதத்திற்கு கலந்து சூடான எண்ணெயில் சிறு சிறு போண்டாவாக கிள்ளி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். கொத்தமல்லி சட்னி, தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.
|