தயிர் அரிசி வடை



என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு - 1/2 கிலோ,
புளித்த தயிர் - 200 மி.லி.,
சீரகம் - 2 டீஸ்பூன், இஞ்சி, பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன்,
உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - தேவைக்கு,
எண்ணெய் - 1/2 லிட்டர்.

எப்படிச் செய்வது?

கடாயில் அரிசி மாவை லேசாக வறுத்துக் கொண்டு, உப்பு, பெருங்காயத்தூள், சீரகம், அரைத்த இஞ்சி, பச்சைமிளகாய் விழுது, கறிவேப்பிலை சேர்த்து கலந்து, கடைந்த தயிர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். சிறிது உருண்டை எடுத்து வாழை இலை அல்லது பால் கவரில் மெல்லிய வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து பரிமாறவும்.

குறிப்பு: மாவில் நறுக்கிய வெங்காயம், தட்டிய பூண்டு சேர்த்து சிறு சிறு அடைகள் போல் தட்டி, தோசைக்கல்லில் எண்ணெய் தடவி சுட்டு எடுத்து கார சட்னியுடன் பரிமாறலாம்.