பட்டர்மில்க் (நீர் மோர்)



என்னென்ன தேவை?

தயிர் - 300 மி.லி.,
ஐஸ் வாட்டர் - 300 மி.லி.,
இஞ்சி - 1 துண்டு,
பச்சைமிளகாய் - 2,
கறிவேப்பிலை - 1 கொத்து,
நறுக்கிய கொத்தமல்லி - 2 டீஸ்பூன்,
கடுகு, பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

தயிரை நன்றாக கடைந்து, ஐஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும். இஞ்சி, பச்சைமிளகாைய மிக்சியில் அரைத்து மோருடன் கலந்து கொள்ளவும். இத்துடன் உப்பு, பெருங்காயத்தூள், கொத்தமல்லித்தழையை சேர்க்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி கலந்து பரிமாறவும்.