கோவைக்காய் பச்சடி



என்னென்ன தேவை?

கோவைக்காய் - 1/4 கிலோ,
பச்சைமிளகாய் - 10,
கறிவேப்பிலை - 1 கொத்து,
தயிர் - 200 மி.லி.,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிது,
கடுகு - சிறிது,
உப்பு - தேவைக்கு,
பொரிக்க எண்ணெய் - 1/4 லிட்டர்.

எப்படிச் செய்வது?

கோவைக்காய், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி எண்ணெயில் பொரித்தெடுத்து தனியே வைக்கவும். மிக்சியில் தேங்காய்த்துருவல், சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும். தயிரில் கடுகு தாளித்து கொட்டி, அரைத்த விழுது, கொத்த மல்லி, உப்பு சேர்த்து கலக்கவும். பரிமாறுவதற்கு முன்பு பொரித்த கோவைக்காய், பச்சைமிளகாயை கலந்து, வெஜ் ரைஸ், சாம்பார் சாதத்துடன் பரிமாறவும்.