கேரள அவியல்



என்னென்ன தேவை?

நீளவாக்கில் நறுக்கிய வாழைக்காய், வெள்ளை பூசணி, முருங்கைக்காய், அவரைக்காய், கேரட், உருளை, பீன்ஸ், செளசௌ, கொத்தவரங்காய் அனைத்தும் சேர்த்து - 1 கிலோ,
தயிர் - 1 கப்.

அரைக்க...

தேங்காய்த்துருவல் - 1½ கப்,
பச்சைமிளகாய் - 10.

தாளிக்க...

தேங்காய் எண்ணெய் - 100 மி.லி.,
சீரகம் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 2 கொத்து,
பெருங்காயத்தூள், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மிக்சியில் தேங்காய், பச்சைமிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். குக்கரில் காய்கள், உப்பு, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து சிறிது நேரம் சூடு செய்து, கடைந்த தயிர், 50 மி.லி. எண்ணெயை ஊற்றி, மீதியுள்ள எண்ணெயில் சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து கொட்டி இறக்கவும்.