மாங்காய் புளிச்ேசரி



என்னென்ன தேவை?

மாங்காய் - 1,
புளிக்காத தயிர் - 100 மி.லி.,
உப்பு, மஞ்சள் தூள் - தேவைக்கு.

அரைக்க...

காய்ந்தமிளகாய்-8,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்.

தாளிக்க...

கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயத்தூள் - தலா 1 டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

காய்ந்தமிளகாய், தேங்காய் சேர்த்து விழுதாக அரைக்கவும். மாங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும். நன்கு வெந்ததும் அரைத்த விழுது, 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிட்டு, கடைந்த தயிர் ஊற்றவும். கடாயில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். மறுபடியும் எண்ணெய் விட்டு பெருங்காயத்தூள், வெந்தயம் தாளித்து கொட்டி இறக்கவும்.