தயிர் கீரை மசியல்



என்னென்ன தேவை?

முளைக்கீரை அல்லது சிறுகீரை - 1 கட்டு,
உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் - தேவைக்கு,
தயிர் - 200 மி.லி,

தாளிக்க...

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்.

அரைக்க...

உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2,
சீரகம் - 1 டீஸ்பூன்,
மிளகு - 1 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்.

எப்படிச் செய்வது?

அரைக்க கொடுத்த பொருட் களை கடாயில் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்து, தண்ணீர் விட்டு அரைக்கவும். கீரையை சுத்தம் செய்து கழுவி பொடியாக நறுக்கி, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும். நன்கு வெந்ததும் அரைத்த விழுது, கடைந்த தயிர் ஊற்றி நுரைக்க பொங்கி வரும்போது இறக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து கொட்டி பரிமாறவும்.