நெல்லிக்காய் தயிர் பச்சடி



என்னென்ன தேவை?

பெரிய நெல்லிக்காய் - 10,
தேங்காய் - 1 துண்டு,
பச்சைமிளகாய் - 4,
புளிப்பில்லாத கெட்டித்தயிர் - 200 மி.லி.,
பெருங்காயத்தூள் - சிறிது.
தாளிக்க...கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?

நெல்லிக்காயை கொட்டையை நீக்கி மிக்சியில் கரகரப்பாக அரைக்கவும். அதே போல் தேங்காய், பச்சைமிளகாயை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் அரைத்த விழுது, உப்பு, பெருங்காயத்தூள், தயிர் கலந்து தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து கொட்டி கலக்கவும். சப்பாத்தி, ஆப்பம், தோசையுடன் பரிமாறவும்.