தயிர் கருணை மசியல்



என்னென்ன தேவை?

மலபார் கருணைக்கிழங்கு - 1/2 கிலோ,
தயிர் - 1/2 லிட்டர், மிளகு,
சீரகம், துவரம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
பச்சரிசி - 1 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
பச்சைமிளகாய் - 10,
பெருங்காயத்தூள், உப்பு - தேவைக்கு,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
தாளிக்க எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?

கருணைக்கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் போட்டு குக்கரில் வேக வைக்கவும். மிக்சியில் மிளகு, சீரகம், துவரம்பருப்பு, பச்சரிசி, தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும். கடாயில் வெந்த கிழங்கு, அரைத்த விழுது, பெருங்காயத்தூள் போட்டு கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் கடைந்த தயிர் ஊற்றி நுரைத்து வரும்பொழுது இறக்கவும். மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி பரிமாறவும்.