தயிர் உருண்டை குழம்பு



என்னென்ன தேவை?

கடைந்த தயிர் - 250 மி.லி.

உருண்டை செய்ய...

கடலைப்பருப்பு - 100 கிராம்,
துவரம்பருப்பு - 50 கிராம்,
காய்ந்தமிளகாய் - 10,
தனியா - 2 டீஸ்பூன்,
உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் - தேவைக்கு,
எண்ணெய் - 4 டீஸ்பூன்.

அரைக்க...

தனியா - 2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 6,
இஞ்சி - 1 துண்டு,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
மிளகு - 1/2 டீஸ்பூன்,
அரிசி - 1 டீஸ்பூன்.

தாளிக்க...

எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 1 கொத்து.

எப்படிச் செய்வது?

கடலைப்பருப்பு, துவரம் பருப்பை 2 மணிநேரம் ஊறவைத்து தனியா, உப்பு, காய்ந்தமிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதில் 1 டீஸ்பூன் எண்ணெய், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வேகவைத்து கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை ஊறவைத்து அரைத்து, 2 டம்ளர் தண்ணீர் விட்டு அடிபிடிக்காமல் கொதிக்க விடவும். இதில் வெந்த உருண்டை, கடைந்த தயிரை ஊற்றி நுரைத்து வரும் பொழுது இறக்கி, தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து கொட்டி பரிமாறவும்.