நூதன முறையில் பால் விற்பனை



இப்போதெல்லாம் சமூக இடைவெளி என்ற மந்திரத்தைதான் பொதுமக்களும், அரசும் ஒட்டுமொத்தமாக முழங்கி வருகிறது. கொரோனா தொற்று உச்சத்தை எட்டியுள்ள இந்த நிலையில் அது தேவையில்லை என மறுக்கவும் முடியாது. சென்னை கோயம்பேட்டில் இதை கடைப்பிடிக்காததால் காய்கறி சந்தையை மூடும் அவலம் ஏற்பட்டது.  

ஆனால் மத்திய பிரதேசத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் வீடு வீடாக சென்று பால் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் புதிய யுக்தியை கடைப்பிடித்து வருகிறார். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்  4 மெகா பால் கேன்களை தனது  பைக்கில் தொங்க விட்டுள்ள பால்வியாபாரி. தனது இருக்கையில் இருந்தபடியே பாலை தேவையான அளவுக்கு அரை லிட்டரோ, ஒரு லிட்டரோ அளந்து ஊற்றுகிறார்.  

அதற்காக நீண்ட பைப்பை பைக்கின் பின்புறத்தில் கட்டியுள்ள அவர் அந்த பைப்பின் ஒரு முனையில் புனல் ஒன்றை இணைத்துள்ளார். அதன் வழியே தேவையான அளவுக்கு வியாபாரி அளந்து ஊற்றும் பாலை வாடிக்கையாளர் பைப் வழியே மறுமுனையில் பாத்திரத்தை வைத்து பிடித்துக் கொள்ள வேண்டியது.  இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் சரண் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கோமதி பாஸ்கரன்