சிறு தொழில்-அசத்தல் வருமானம் தரும் ஆன்லைன் ஃப்ரான்சைஸி!



அன்றொரு நாளில் பண்டமாற்று முறையில் பொருள்கள் விற்கப்பட்டன. காலப்போக்கில் பல்வேறு மாற்றங்களைக் கடந்து மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட் என வியாபார முறைகள் மாறின. இன்றைக்கு உள்ளங்கையில் உலகம் வந்துவிட்டதால் ஆன்லைன் வர்த்தகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாம் விரும்பிய பொருள்களை ஆர்டர் செய்தால் குறிப்பிட்ட நாளில் வீடு தேடி வரும்.
அப்படி வரும் பொருட்களுக்கு முன்கூட்டியே பணம் செலுத்தும் முறையும், வந்த பிறகு பணம் செலுத்தும் முறையும் உள்ளது. மிகவும் எளிமையாக்கப்பட்ட இந்த வர்த்தகத்தில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை. செய்கூலி, சேதாரம் இல்லாமல் உரிய பொருளை மக்கள் பெறுவதுடன் அலைந்து திரிந்து வாங்க வேண்டிய அவசியமில்லாததால் மக்களுக்கு இதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

இத்தகைய வியாபாரத் தந்திரத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறது மதுரையைச் சேர்ந்த ம.கா புட்ஸ் (MAKA FOODS) என்னும் நிறுவனம். இந்த ஆன்லைன் வர்த்தகத்தில் தங்களையும் இணைத்து விநியோக உரிமை பெறுபவர்களுக்கு மாதந்தோறும் நிலையான வருமானத்தைப் பெற்றுத்தரும் அருமையான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது இந்த நிறுவனம். இன்றைய சூழலில் இயற்கை சார்ந்த பொருள்களின் மீது மக்களுக்கு ஆர்வம் அதிகரித்து வருகிறது.

அதிலும் உணவு முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் சில தயாரிப்புகளை கொண்டு செல்லும்போது நிச்சயம் வரவேற்பு இருக்கும். அந்த வகையில் உலக அளவில் அதிக அளவில் சர்க்கரை நோயாளிகள் உள்ள நமது தாயகத்தில் அந்நோய்க்கு எளிமையான தீர்வுகாண விழைந்திருக்கிறது இந் நிறுவனம். வியாபாரம் மட்டுமல்லாமல் மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த ம.கா புட்ஸ் நிர்வாக இயக்குநர் அருணா, சர்க்கரைக்கு மாற்றாக சீனித்துளசியை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இதோ... அவரே பேசுகிறார்…

``உலக அளவில் ஆன்லைன் வர்த்தகம் பெருகிவரும் இந்தச் சூழலில் ஸ்டீவியா என்னும் சீனித்துளசியில் டீ தயாரிக்கும் அந்த தொழில்நுட்பத்தை நான் கண்டறிந்தேன். இன்றைக்கு சாலையோர டீக்கடையாக இருந்தாலும் சரி, ஸ்டார் ஓட்டல், லாட்ஜ் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களாக
இருந்தாலும் அங்கே டீ இல்லாமல் இருப்பதில்லை.

அங்கே  சிலர், அரை சர்க்கரை போடுங்கள் என்று சொல்வதை நாம் கேட்டிருப்போம். சர்க்கரை நோய்க்கு வெள்ளைச் சர்க்கரை முக்கிய எதிரி என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்த உண்மை தெரிந்தும்கூட சர்க்கரை நோயாளிகள் உள்பட எல்லோருமே அவற்றைத்தான் உண்கிறோம். நமது அன்றாட உணவில் டீ மட்டுமல்லாது பல்வேறு உணவுப்பொருள்களின் வழியாகவும் இந்த வெள்ளைச் சர்க்கரை நம் உடலுக்குள் சென்றடைகிறது.

வெள்ளைச் சர்க்கரை கொதிக்கும்போது பல வேதியியல் அமிலங்களைச் சுரக்கும். அதில் ஒன்றான லாக்டிக் அமிலம் சுரப்பதால் அது பல் அரிப்பு மற்றும் பல் சிதைவை ஏற்படுத்தும். ஆனால், சீனித்துளசியில் உள்ள இனிப்பில் லாக்டிக் அமிலம் உற்பத்தியாவதில்லை. ஆகவே, சீனித்துளசி கலந்த டீ அருந்துவதால் பல் அரிப்பு மற்றும் பல் சிதைவு ஏற்படாததுடன் நல்லதொரு ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு வித்திடும்.

சர்க்கரைக்கு இணையாக இனிப்புச்சுவை கொண்ட இந்த சீனித்துளசியை (Stevia Leaf Extract) எல்லோரும் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம். வரும் 2030-ம் ஆண்டில் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 100 மில்லியனை தாண்டும் என்று சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு (International Diabetes Federation) கூறியுள்ள நிலையில் சீனித்துளசியின் வரவு வயிற்றில் பால் வார்த்திருக்கிறது. எதிர்கால இந்தியா சர்க்கரை நோயில்லா ஒரு தேசமாக அமைய நம்மால் ஆன பணிகளைச் செய்வோம்.

மக்களுக்கு நல்லது செய்யும் அதேவேளையில், வீட்டிலிருந்தபடியே தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்கள் இந்த ஆன்லைன் வர்த்தகத்தில் உங்களை இணைத்துக் கொள்ளலாம். இதில் நீங்கள் செய்யும் முதலீட்டின் மூலம் மாதந்தோறும் நிரந்தர வருமானம் கிடைக்கும். இந்த வர்த்தகத்தில் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்ட வேண்டிய அவசியமில்லை.

15 ஆயிரத்தில் தொடங்கி அதிகபட்சமாக 5 லட்சம் வரை முதலீடு செய்து உங்கள் தொழிலை செய்யலாம். கொரோனா வைரஸ் மற்றும் இந்த ஊரடங்கு காலத்தில் சிறு தொழில் நிறுவனங்கள்கூட ஆன்லைன்  வர்த்தகத்தில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றன. ஆகவே, இந்தச் சூழல் பணம் சம்பாதிக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது’’ என்றார் அருணா.

‘‘வெள்ளைச் சர்க்கரை உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கக்கூடியது என்று தெரிந்தும் அதை நாம் பயன்படுத்திக்கொண்டு வருகிறோம். இது ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் பல்வேறு உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்று தெரிந்தும் இன்னும் நாம் ஏன் அந்த மெல்லக்கொல்லும் விஷத்தை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவரை அதன் கூறுகளைப் பற்றி நாம் அறியாததால் உட் கொண்டோம். இப்போது உண்மை வெட்ட வெளிச்சத்துக்கு வந்துவிட்டதால் சர்க்கரைக்கு மாற்றான ஒரு உணவுப்பொருளை நாம் தேட வேண்டிய அவசியம் வந்துவிட்டது.

சர்க்கரை சுவையானது மட்டுமன்றி விலை குறைவானது என்று சில காரணங்களை நாம் சொன்னாலும் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்ட, ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட, செறிவூட்டப்பட்ட உணவுப்பொருளுக்கு மாற்றாக இயற்கை முறையில் விளையும் பொருள்களை தேடி நாடி ஓடிக்கொண்டிருக்கிறோம்.

அந்த வரிசையில் இந்த சீனித்துளசியும் இயற்கையாக விளையக்கூடியது. நல்லது எது, கெட்டது எது என்று பகுப்பாய்வு செய்யும் திறன் உள்ள நாம் சீனித்துளசி போன்ற நல்ல உணவுப்பொருள்களை உண்ண பழகுவோம். முதலில் உண்ணும்போது சீனித்துளசியின் சுவை சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். பிறகு சுவை மட்டுமல்ல அதன் மருத்துவத்தன்மையும் நிச்சயம் அதை விரும்பத் தூண்டும். மாற்றம் ஒன்றே மாறாதது. காலத்துக்கேற்ப நம்மை மாற்றிக் கொள்வோம். வீட்டிலிருந்தே தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு ஏற்றத்தொழில் இந்த ஆன்லைன் ஃப்ரான்சைஸி’’ என்றார் அருணா.

தோ.திருத்துவராஜ்