ப்ரியங்களுடன்...
‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ என்பதற்கேற்ப அன்பின் மகத்துவங்களை ‘ஷேர்’ செய்திருந்தது நிவேதிதாவின் ‘அன்பை விதைத்து அன்பையே அறுவடை செய்வோம்’ கட்டுரை. - வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி-18.
முன்பெல்லாம் ஒரு வீடு கட்டுமானத்திற்கு கொத்தனார் சொல்வதுதான் வேதவாக்கு. ஆனால், தற்போது ஹோம் ஆட்டோமேஷன் என்று ஒரு வழிகாட்டியே இருப்பது ஆச்சரியம்தான். - சி.கார்த்திகேயன், சாத்தூர்.
இளம்பிறை எழுதிய ‘பசித்தீ’ கண்களில் நீர் வரவழைத்தது. பசியின் கொடுமையை உணர்த்திய விதம் அருமை. ‘ஒருசாண் வயிறு இல்லாவிட்டால் இந்த உலகத்தில் ஏது கலாட்டா’ என்ற வரிகள் பொன்னேட்டில் பொரிக்க வேண்டியவை. இந்த மாதம் என்ன விசேஷம் பஞ்சாங்கம் பார்க்க வேண்டிய வேலை இல்லாமல் அந்தந்த நாட்களின் விசேஷங்களை முன்கூட்டியே வெளியிட்டதற்கு தோழிக்கு பாராட்டுகள்! - வத்சலா சதாசிவன், சிட்லபாக்கம், சென்னை - 64.
மறந்தும் மறைந்தும் போன உணவுகள் 30 என்ற இலவச இணைப்பில் வெளியாகியிருந்த நமது பாரம்பரிய உணவு வகைகள் மீண்டும் நினைவுப் படுத்தி ‘பீட்சா’ பிரியர்களையும் திரும்பிப் பார்க்க வைப்பதாக இருந்தது. டெங்கு, வைரஸ் போன்ற காய்ச்சல் வர இருக்கும் இந்த நேரத்தில் உணவே மருந்தாக தொகுத்துத் தந்தமைக்கு நன்றி ! - ஜே.சி.ஜெரினாகாந்த், ஆலந்தூர்,சென்னை மற்றும் கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி.
வயது முதிர்வு எண்ணத்தை போக்கி வாழ்வை மகிழ்ச்சியுடன் கழித்தல் மனதின் தன்மையைப் பொறுத்தே சாத்தியம் என்பதை முதுமையிலும் இளமையான செல்பாடுகளை விளக்கியது வசந்தா ரத்னவேலுவின் வாழ்வியல் முறை. வயது குறித்த கவலையை போக்கிவிட்டது. - வள்ளியூர் ஏ.பி.எஸ்.ரவீந்திரன், நாகர்கோவில்.
‘மினியேச்சர் மாயாஜாலம்’ கண்களைக் கவர்ந்து, இதயத்தில் நுழைந்து, நாவில் நீர் ஊறச் செய்தது. பின்னர்தான் தெரிந்தது ‘சாப்பிட முடியாது’ என்று. - எஸ்.வளர்மதி, கொட்டாரம்.
ஹேமா பானு தந்த ‘பாக்கு மட்டையில் பணம் பண்ணலாம்’ தகவல்கள் வியப்பை அளித்தது. சிறந்த ஆட்சியர் விருது பெற்ற சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழியை பாராட்டலாம். அவர் தூய சேவைக்கு ஒரு சல்யூட்! - சு.இலக்குமணசுவாமி, திருநகர், மதுரை.
‘விருது பெற்றவர்களை மகிழ்விக்கும் வகையில் தனியே விருந்தும் கொடுக்கணும்’ என மனம் ஏங்கியது. ரம்யா(மான)ரெட்டியின் க்ளிக் ஒவ்வொன்றும் பளிச்...பளிச்... ல (லி)தா, லாவண்யா பயணம் களை கட்டடியது. - சுகந்தி நாராயண், வியாசர்நகர்.
பருப்புக் கீரையின் மகத்துவம், மருத்துவ குணம் வியக்க வைத்தது. சூப்பர் சீனியர் காமாட்சி மகாலிங்கம், ராதாபாலு இவர்களது நல்ல வாழ்க்கை, நம் வாழ்க்கை சிறப்பாகத் திகழ முன்னுதாரணமாக பரிமளித்தது. - கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
இளம்பிறை அவர்களின் ‘பசித்தீ’ நம்நாடு சுதந்திரம் பெற்று இத்தனை வருடங்களானாலும் ‘காலை உணவு இல்லாமல் வகுப்பறையில் பசியோடு அமர்ந்திருக்கும் லட்சக்கணக்கான குழந்தைகள் உண்டு’ என்ற வரி சிந்திக்க வைக்கிறது. பாரதியாரின் குறிப்புகளும் இந்த காலக்கட்டத்திற்கு ஏற்றதாக இருக்கிறது. - ஜெ.ஜெயம், காரமடை.
|