என் சமையலறையில்!



டிப்ஸ்...டிப்ஸ்...

* தர்பூசணியின் தோலை சீவி உப்புக் கலந்த தயிரில் ஒரு நாள் ஊற வைத்து பின்பு வெயிலில் காய வைத்து எண்ணெயில் பொரித்தால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
- எஸ்.மலர்விழி கோவிந்தசாமி, ஊத்தங்கரை.

* ேதன்குழல் ெசய்ய மாவு அரைக்கும்ேபாது உருளைக்கிழங்கை வேகவைத்து அதனுடன் சேர்த்து அரைத்தால் தேன்குழல் மிகமிக சுவையாக இருக்கும்.
- எச்.ராஜேஸ்வரி, மாங்காடு.

* புளிக்கரைசலில், சிறிது வெல்லம், மஞ்சள்தூள் போட்டு கொதிக்கவிட்டு பின்பு வறுத்த பொடி, தாளித்த பருப்பு வகைகள், உப்பு சேர்த்தால் புளிக்காய்ச்சல் மிகுந்த சுவையாக இருக்கும்.
- விஜயா, மருதவன்சேரி.

* முருங்கைப்பூவை தேங்காய் எண்ணெயில் பொன்னிறமாக வதக்கி மோர்க்குழம்பில் போட்டு ஒரு ெகாதி வந்ததும் இறக்கி விடுங்கள். வாசனை அக்கம்பக்கம் வரை பரவும்.
- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி.

* கூட்டு குருமா செய்யும்போது அத்துடன் ஒரு கைப்பிடி முளைக்கட்டிய பயறைச் சேர்த்து சமைக்கவும். உணவுப்பண்டத்தின் புரதச்சத்து பல மடங்கு அதிகமாகும்.
- ஆர்.அஜிதா, கம்பம்.
   
* உளுந்து வடை மாவு ெராம்ப நீர்த்துப் போய்விட்டால் அந்த மாவுடன் கொஞ்சம் அவலைக் கலந்து தட்டினால் வடை மிருதுவாக
சுவையாக இருக்கும்.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
   
* பருப்புப் பொடி செய்யும் போது துவரம்பருப்புடன் சிறிது கொள்ளையும் சேர்த்துக் கொண்டால் பொடி மிகவும் ருசியாக இருக்கும். கொள்ளு வாய்வுக்கு நல்ல மருந்து. அத்துடன் உடலில் சேர்ந்துள்ள கொழுப்பையும் கரைக்கக்கூடியது.
- ஜி.ரம்யா, ஊத்தங்கரை.
   
* பருப்பு உருண்டை சில நேரம் குழம்பிலேயே கரைந்துவிடும். இதைத் தவிர்க்க அரைத்தவுடன் சிறிது எண்ணெய் விட்டு கடாயில் ஐந்து நிமிடம் வதக்கி விட்டு பிறகு அரிசி மாவு கலந்து உருட்டி, குழம்பு தளதளவென்று கொதிக்கும்போது ஒவ்வொன்றாகப் போட்டால் கரையாது.
- அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
   
* கோதுமையை மாவாக திரிக்கும்போது, ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்தால் சப்பாத்தி சாஃப்ட்டாக வரும்.
- என்.கோமதி, நெல்லை-7.

* துருவிய தேங்காயில் சிறிதளவு கொதிக்கும் நீரை ஊற்றி மூடி வைத்து விடுங்கள். நீர் ஆறிய பின்பு தேங்காயை பிசைந்து எளிதாக பால் எடுக்கலாம். இரண்டாவது முறை பால் எடுக்க வேண்டுமானாலும் அதே முறையை மீண்டும் கடைபிடியுங்கள்.
- எஸ்.மலர்விழி கோவிந்தசாமி, ஊத்தங்கரை.
   
* பூமிக்கடியில் கிடைக்கும் வேர்க்கடலை, முள்ளங்கி, கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடு வது நல்லது. இவை குடலையும் ரத்தத்தையும் சுத்தம் செய்வன. ரத்தத்திலிருந்து யூரிக் அமிலத்தை வெளியேற்றும் ஆற்றல் இந்த காய்கறிகளுக்கு உண்டு.
- சுகந்தாராம், சென்னை - 59.
   
* சாம்பார் செய்யும்போது புளியின் அளவைக் குறைத்து அல்லது தவிர்த்து, தக்காளி பழங்களைச் சேர்த்துக் கொதிக்கவிட்டால் சுவையும் கூடும். எல்லாவிதமான டிபன் வகைகளுக்கும் பொருத்தமான சைட் டிஷ்ஷாக அமையும்.
- எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.