நீங்க மட்டும் அ.சாமி கலரா?



ட்விட்டர் ஸ்பெஷல்

ஷாந்தி
@shaan_64

என்னைப் பற்றி எழுதவே திணறுது. நானெல்லாம் ட்வீட் எழுதி ..........:)

* ரெண்டு டிகிரி கொறஞ்சா போதும்... எங்க ஊர் ஆளுங்க மஃப்ளர் ஸ்வெட்டர்னு காஷ்மீர் ரேஞ்சுக்கு சுத்தறாங்க... காதை மட்டும் கவர் பண்ணி இயர்போன் மாதிரி வேற!

* நானே திங்க் பண்ணுனது. மார்கழி மாசம்  அதிகாலை வாசல்ல வெளக்கு வெக்குறது, அந்த கரன்ட் இல்லா காலத்துல கோயிலுக்கு போறவங்களுக்கு தெரு வெளிச்சமாகவா?

* என்ன பிரச்னை வந்தாலும் (என்னை மாதிரி 58 க்ராஸ் கொஸ்ட்டீன் கேட்டுட்டு இருக்காம) அப்படியே கடவுள்கிட்ட சரண்டர் ஆகுறவங்கள பாத்தா பொறாமைஸ்!

* படிக்குற காலத்துல, வீட்டுல பாட்டு பாடீட்டு சுத்தும்போது காதல்ங்குற வார்த்தை வர்ற இடத்துலெல்லாம் அதச் சொல்லாம ஹம் பண்ணுன காலத்தை  திங்க் பண்ணா!

* நமக்கு எல்லாம் ‘இண்டியா இஸ் மை கன்ட்ரி’ன்னு டெய்லி ப்லெட்ஜ் எடுக்கறது ஸ்கூலோடு போச்சு. முஸ்லிம்ஸ் நெலம... அத சொல்லிட்டே இருந்தாதான் :(



* வெயில்ல உஸ்ஸு உஸ்ஸுன்னுட்டு வேர்த்து வழிஞ்சுட்டு காட்டன் புடவை கட்டிட்டு சமாளிச்சுறலாம். குளிர்ல/ஜில்லுன்னு பைப் தண்ணி தாங்க முடியல சாமி!

* லீவ்ல வீட்டுக்கு வந்த குழந்தைகளுக்காக அம்மாக்கள் கிச்சன்ல ஓவர்டைம் செய்ய, அப்பாக்களுக்கும் ‘புல்லுக்கும் ஆங்கே புசியுமாம்’னு போய் சேருது!

* சோறில்லாதவனப் பத்தி கவலப்படாம இருக்குறவன் திங்குறது ஆட்டுக்கறியா மாட்டுக்கறியான்னு ஆராய்ச்சி பண்ணிகிட்டு. என்னத்த ஸ்டேட் கவர்மென்டோ சென்ட்ரலோ...

* யாராவது குழந்தைங்க வீட்டுக்கு வந்து போனவுடன் மனசுல ஒரு விதமான நிம்மதி. ‘நல்ல வேளை எப்பவாவதுதான் வந்து இப்படி அழிச்சாட்டியம் பண்ணுதுங்க!’

* ஏழைப்பொண்ணு பார்லர்ல ஃபேசியலுக்கும் ஃப்ளீச்சிங்குக்கும் செலவு செய்யுது. கருப்புன்னு மாப்பிள்ளை செட் ஆகல. அடப்பாவிகளா... நீங்க மட்டும் அ.சாமி கலரா?