தேசிய மகளிர் ஆணையம் அமைப்பும் செயல்பாடும்



இந்திய அரசியல் அமைப்பு  சாசனம் சட்டத்தின் முன் அனைவரையும் சமமாகவே கருதுகிறது. அதே அரசியல் அமைப்பு சாசனத்தின் கீழ் பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான நலன் காக்க சிறப்புச் சட்டங்கள் இயற்ற வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

 ஆனாலும், நடைமுறையில் பெண்களுக்கு அவ்வாறான சமமான ஒரு தளத்தை இந்தச் சமுதாயம் இன்று வரை ஏற்படுத்தித் தரவில்லை. அதனால் பெண்களின் காவல் அரண்களாக விளங்கியவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் முயற்சியின் பலனாக பெண்கள் நலனை போற்றிப் பாதுகாக்க பெண்கள் ஆணையம் அமைக்க 1990ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தின் கீழ் தேசிய மகளிர் ஆணையத்தில் தலைவராக ஒருவரும், 5 பெண் உறுப்பினர்களும் கொண்ட குழு அமைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு பெண்களுக்காகப் பாடுபடும் உயரிய நோக்கத்தில் செயலாற்றும் ஒரு பெண்மணியை தலைவராகத் தேர்ந்தெடுக்கும். ஏனைய 5 உறுப்பினர்களும் சட்ட அனுபவமுள்ளவர்களாகவோ, சட்டம் இயற்றிய அனுபவமுள்ளவர்களாவோ, தொழிற்சங்கத்தில் ஈடுபட்டவராகவோ, ஒரு நிறுவனத்தின் தலைவராகவோ, கல்வி, உடல்நலம் மற்றும் சமூக நல காவலர்களாகவோ விளங்கியிருத்தல் அவசியம். இவர்களுள் ஒரு உறுப்பினர் பிற்படுத்தப்பட்ட இனத்தை அல்லது பழங்குடியினரைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். மேலும், குடிமுறை அரசுப் பணியில் (சிவில் சர்வீஸ்)     இருக்கும் ஒரு அதிகாரியை உறுப்பினர்- செயலாளராக நியமிப்பார்கள். உறுப்பினர்-செயலாளரைத் தவிர ஏனைய
உறுப்பினர்கள் 3 ஆண்டு காலம் பதவி வகிப்பார்கள். 
இந்தப் பதவியை வகிப்பவர்களுக்குப் பின்வரும் விஷயங்களில் ஏதேனும் ஒன்று பொருந்துமெனில் பதவியினைத் தொடர்ந்து வகிக்க இயலாது.
* சட்டப்படி பட்ட கடனைத் தீர்க்க முடியாமல் நொடிந்த நிலையில் இருப்பவர் (ஹிஸீபீவீs நீலீணீக்ஷீரீமீபீ மிஸீsஷீறீஸ்மீபீ).
* தவறான நடத்தைக்காக சட்டப்படி தண்டனை பெற்றவர். 
* மனநலம் பாதிக்கப்பட்டவர்.
* தனக்கு கொடுக்கப்பட்ட பணியை மறுத்தவர் அல்லது அந்தப் பணியினை செய்யும் தகுதியை இழந்தவர்.
* ஆணையத்தின் அமர்வுகளுக்கு தொடர்ந்து 3 முறை முன்னறிவிப்பின்றி வராமல் இருப்பவர்.
* தனக்கு கொடுத்திருக்கும் தலைவர் பதவியையோ,
உறுப்பினர் பதவியையோ
தவறான வகையில் உபயோகித்தவர்.
ஆணையத்தின் செயல்பாடுகள்
* அரசியல் அமைப்பு சாசனம் மற்றும் ஏனையப் பெண்கள் நலன் காக்கும் சட்டங்கள் கொடுக்கும் பாதுகாப்புகளை அவர்களின் நலனுக்காக பின்பற்றப்
படுகிறதா என்று ஆராய்தல் மற்றும்
கவனித்தல்.
*    பெண்கள் சட்டம் கொடுக்கும்
பாதுகாப்பு நடைமுறைகள் பற்றி மத்திய
அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தல்.
* பெண்கள் நலன் காக்க, அவர்களின் தரம் உயர அரசுக்கு பரிந்துரை அளித்தல்.
* இந்திய அரசியல் அமைப்பு சாசனம், ஏனையப் பெண்கள் நலன் காக்கும் சட்டங்கள் அனைத்தும் சரிவர நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்று பரிசீலித்து சட்ட மாற்றம் தேவை என்றால் பரிந்துரைத்தல்.
* பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்தல்.
* பெண்களின் உரிமை தடை செய்யப்படும் போதும், சட்டங்கள் பின்பற்றப்படாமல்
இருக்கும் பட்சத்திலும் தன்னிச்சையாக பெண்கள் நலன்
காக்கும் வகையில் பங்களித்தல்.
* பெண்களின் நிலை குறித்து சிறப்பு ஆராய்ச்சி மேற்
கொள்ளுதல்.
* மத்திய, மாநில அரசுகளுக்கு பெண்களின் நிலை குறித்து மதிப்பீடு செய்து அறிக்கை அனுப்புதல்.
* அரசாங்கத்துக்கு பெண்கள் நிலை குறித்து அவ்வப்போது அறிக்கை சமர்ப்பித்தல்.
* பெண்கள் சிறை, பாதுகாப்பு மையங்கள் அல்லது பெண்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடங்களை சோதனை செய்து தேவைப்படும் உதவிகளையும் மேம்பாடுகளையும் செய்ய
வலியுறுத்தல்.
மகளிர் ஆணையங்களுக்கு உரிமையியல் (சிவில்) நீதிமன்றங்களுக்குரிய அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
எனினும் அவற்றின் ஆணைகளை நீதிமன்ற ஆணைகளுக்கு ஒப்பாக நடைமுறைப்படுத்த இயலாது. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள்
நீதியரசர் மாண்புமிகு வி.ஆர். கிருஷ்ணய்யர் மகளிர் நல ஆணையங்களைப் பற்றி குறிப்பிடுகையில், ‘எவ்வளவு அதிகாரம் இருந்தாலும், இரும்புக்கரம் கொண்டு செயல்படுத்த இயலாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது வருந்தத்தக்க விஷயமே’ என்று குறிப்பிட்டுள்ளார். எனினும், மகளிர் ஆணையங்களின் முன் வரும் வழக்குகளிலோ அல்லது அவர்கள் தன்னிச்சையாக எடுத்துக்கொள்ளும் வழக்குகளிலோ, அந்த வழக்குக்குத் தேவையான நபரை கொண்டு வந்து நிறுத்தவும், சத்திய பிரமாணத்தின் முன் விசாரிக்கவும் வழிவகை செய்யப்
பட்டுள்ளது.
* வழக்குக்குத் தேவையான எந்தவிதமான ஆதாரங்களையும் தன் முன் சமர்ப்பிக்க வைப்பது.
* யாரிடம் இருந்தும் சாட்சி வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் அதிகாரம் உண்டு.
* அனைத்துவிதமான அரசு ஆவணங்களையோ, நீதிமன்ற ஆவணங்களையோ கோர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
* சாட்சிகளையோ, ஆவணங்களையோ
விசாரிக்கவோ, சரிபார்க்கவோ தன்னுடைய இடத்தில் எந்த நபரையும் நியமிக்க உரிமை உண்டு.
மகளிர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் பொது ஊழியர்கள்      (பப்ளிக் சர்வன்ட்) என்று கருதப்படுவார்கள். மத்திய அரசாங்கம்  இவர்களுக்கான ஊதியத்தை சலுகைகளாக தருகிறது. இந்த ஆணையம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மத்திய அரசு அந்த ஆண்டு அறிக்கையில் அவர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில் எடுத்த நடவடிக்கையுடன்,  தணிக்கை அறிக்கையையும் சேர்த்து பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

பெண்களின் நலன் காக்கவும், அவர்கள் வாழ்வின் தரத்தை முன்னேற்ற பரிந்துரை அளிக்கவும், சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்காக குரல் கொடுக்கவும் இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும், மாநில மகளிர் ஆணையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

கருவிலிருந்து கல்லறை வரை பெண்களுக்கு ஏற்படும் எந்தவிதமான பிரச்னைகளுக்கும் மகளிர் ஆணையம் தன் அன்பு கரத்தை நீட்ட தயாராக உள்ளது. நீதிமன்றங்களுக்கோ, காவல் நிலையத்துக்கோ போகத் தயங்கும் பெண்கள் மகளிர் ஆணையம் மூலம் தங்களுக்கு வேண்டிய நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். சட்ட விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பெரும்பாலான பெண்கள் தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்க வழி இல்லாமல் நிர்க்கதியாக நிற்கிறார்கள். இன்று பெண்களுக்கு தேவை சட்ட விழிப்புணர்வும் சட்ட அறிவுமே!

பெண்களின்
நலன் காக்கவும்,
அவர்கள் வாழ்வின்
தரத்தை
முன்னேற்ற
பரிந்துரை அளிக்கவும்,
சமூகத்தில்
பெண்களுக்கு
ஏற்படும்
பிரச்னைகளுக்காக
குரல் கொடுக்கவும்
தேசிய மகளிர்
ஆணையம்
அமைக்கப்பட்டுள்ளது.

எழுத்து வடிவம்: சாஹா