பிரியங்களுடன்



மார்கழி இசை சிறப்பிதழை வாசித்தது இனிய கச்சேரியை கேட்டு ரசித்த உணர்வைத் தந்தது. ‘ஆடுவோம் கொண்டாடுவோம்’ பக்கங்கள் அனைத்தும் அருமை!
- சந்திரலேகா அக்கினி, மதுரை-3.
பரிசு கிடைக்கிறதோ இல்லையோ... தோழி போட்டிகளில் பங்கேற்கும் ஆர்வமே அலாதி!
- இ.டி.ஹேமமாலினி, சென்னை-23 மற்றும் ம.வசந்தா கச்சிராயபாளையம்.

30 வகை கிராமத்து உணவுகள் அற்புதம். சுலபமாக செய்வதற்கேற்ற சுவையான உணவுகள்!
- ஜி.விஜயலட்சுமி, கும்பகோணம்-1 மற்றும் வேதவல்லி தனசேகரன், சென்னை-34.
தோழியில் வந்த படைப்புக்கு விருது எனில், வாசகிகளாகிய எங்களுக்கும் பெருமையே! பொறுப்பாசிரியருக்கு வாழ்த்துகள். ஆண்டாள் ப்ரியதர்ஷினியின் பதில்கள், ப்ரியத்துடன் தமிழை அவர் ஆள்கிறாரா... தமிழ் அவரை ஆள்கிறதா என்ற மயக்கத்தைத் தந்தது!
- ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை-16. ஜி.மைதிலி கோகுல கிருஷ்ணன், திருவாரூர் மற்றும் ஆர்.ரேவதி, திருப்பத்தூர்.
தோழி பொறுப்பாசிரியருக்கு ‘லாட்லி ஊடக விருது’ கிடைத்ததற்கு மனமார்ந்த பாராட்டுகள்! அம்மாவின் அன்பு, அக்கறை பற்றி அழகாகக் கூறியிருப்பது நம்ம சின்னப் பொண்ணு ஷோபனாவா என வியந்தேன். அருமையான இசை கேட்பது போலவே இருந்தது.
- பானு பெரியதம்பி, சேலம்-30 (மின்னஞ்சலில்)...
இசை கச்சேரிகளில் கடம் வாசிக்கும்போது, ‘இந்த அடிக்கு இப்படி தாங்குதே!’ என்று வியக்கும் எங்களுக்கு, மானாமதுரை மீனாட்சி ‘கடம்’ உருவாகும் முறையை விளக்கி, மேலும் வியப்படையச் செய்துவிட்டார்.
- என்.திவ்யப்பிரியா, சிதம்பரம்-1., ந.பேச்சியம்மாள், சிதம்பரம்-1 மற்றும் உமா சாய்நாதன், தஞ்சாவூர்-1.
பாடகி சைந்தவியுடன் தோழி வாசகிகளின் சந்திப்பு பிரமாதம். அவரது யதார்த்தமான பதில்கள், திருமண வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்திருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது.
- கீதா பிரேமானந்த், சென்னை-68.
பல்வேறு ஆற்றலை தன் வசம் வளர்த்துக் கொண்டு வரும் பாடகி சக்திஸ்ரீ கோபாலன் காட்டில் அடைமழை பொழியும் காலம் வெகு தொலைவில் இல்லை.
- பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர் மற்றும்
ஆர். சுமதி, ராசிபுரம்.
‘ஆரோக்கியப் பெட்டகம்’ பகுதியில் வெளியாகியிருந்த பார்லியின் மருத்துவ குணங்களும் அதைக் கொண்டு தயாரிக்கக்கூடிய சமையற் குறிப்புகளும் பெரிதும் கவர்ந்தன.
- வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி-18., ஆர்.கே.பிரேமிகா, சென்னை-11 மற்றும் வே.அருணாதேவி, வடமாதிமங்கலம்.
மனநல மருத்துவர் கவுதம்தாஸ் பக்கங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேன். பயனுடையதாக இருக்கிறது. ‘அலங்காரம் கலையாத அழகு’ அருமை!
- பொ.உமாதேவி, பு.புளியம்பட்டி.
மகாநதி ஷோபனாவின் அம்மா பாசம் பெரிதும் நெகிழ வைத்தது.
- பி.வைஷ்ணவி, சென்னை-68 மற்றும்
ஏ.ஹெச். பசீரா ஃபாரூக், காயல்பட்டினம்.
ஒவ்வொருவரின் பிரச்னையையும் அவரவர் இடத்தில் இருந்து பாருங்கள்... அப்போதுதான் அதன் தீவிரமும் அதைத் தீர்ப்பதின் வழி
முறைகளும் சுலபமாகப் புரியும் என்பதை ‘உறவுகள்’ பகுதியில் மருத்துவர் காமராஜ் வெகு இயல்பாக உணர்த்தியிருக்கிறார்.
- பழ.கவிதா சிவமணி, புன்செய்ப்புளியம்பட்டி.
‘உள்ளத்தில் பொறாமை நுழைய இடம் கொடுத்தால், அது வளர்ச்சிக்கு தடை ஆகிவிடும் என்ற கவிதா கிருஷ்ணமூர்த்தியின் அறிவுரை எல்லா துறைக்குமே பொருந்தும்.
- சுகந்தா ராம், சென்னை-59.
‘சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப் போறேன்’ என்பார்கள். மோகன் வைத்யா சங்கீதம் போல் சமையலையும் ரசித்துச் சுவையாகச் செய்வது, ராக ஆலாபனை போன்ற ஆராதனை!
- வரலஷ்மி முத்துசாமி, சென்னை-37 மற்றும் கவிதா நரசிம்மன், சர்க்கார்பதி.
சம்பாதிப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாத அனுஷாவைப் பற்றிப் படித்து பிரமிப்
படைந்தேன். பெண்களை வரதட்சணைக் கொடுமையிலிருந்து காப்பதற்காக இந்திய தண்டனை சட்டமும் திருத்தம் செய்யப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்க செய்தி.
- பிரதிபா ஏ.பி.எஸ்.ரவீந்திரன், நாகர்கோவில்.
2ஆயிரம் பெண்களை துப்பாக்கி வீராங்கனைகளாக்கிய ஆனி ஓக்லே அசத்தல் பெண்மணி. மூத்த கலா, இளைய அனுஷா என சரிசமமாக நடனக்கலைஞர்களை கௌரவித்த உங்க பரந்த மனசுக்கு ஒரு பாராட்டு!
- அ.யாழினி பர்வதம், சேனை-78 மற்றும் கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி.