ப்ரியங்களுடன்...
 *இன்றைய காலக்கட்டத்தில் சோலோ டிராவலர் செய்வது ரொம்பவும் கஷ்டம். ஆனால் கௌதமி தனியாக டிராவலர் செய்தது தனிப்பிறவிதான். இதற்கு ஊக்கம், தன்னம்பிக்கை, சுறுசுறுப்பு இருந்தால் போதும் அசத்திவிடலாம். - வண்ணை கணேசன், சென்னை.
*‘வரலாற்றில் மறைக்கப்பட்ட பெண் ஆளுமைகளை’ தொகுத்து ‘சர்வதேச மகளிர் தினத்தில்’ பிரசுரம் செய்திருப்பது பெண்களை கௌரவப்படுத்துவது போல் பெருமைப்படச் செய்தது. - அம்மணி ரெங்கசாமி, வடுகப்பட்டி.
* மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்கும் ‘அக்னி சிறகுகள்’ வாசித்தேன். அரசுப்பள்ளி மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் அமைப்பின் நிறுவனர் மகேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகள்! - எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
*மூன்றாயிரம் ஆண்டுகள் வரலாற்றை கொண்ட பழனி தண்டாயுதபாணி கோவிலின் துணைக் கோவிலாக இருக்கும் பூம்பாறை ‘குழந்தை வேலப்பர்’ கோவிலின் சிறப்புகளை விளக்கமாக அறிந்து மகிழ்ந்தேன். - டி.முருகேசன், கங்களாஞ்சேரி.
*எங்ேக இருக்கிறான் என் மிருதுவான ஆண்? படித்து பரவசப்பட்டேன். மகளிர் தினத்தை சிறப்பித்துவிட்டது கட்டுரை. பெண்கள் மனதில் இருப்பதை அப்படியே படம்பிடித்து காட்டிவிட்டது. - ராஜிகுருஸ்வாமி, ஆதம்பாக்கம்.
*அறுபதுக்கும் மேற்பட்ட விருதுகளை அள்ளிக் குவித்திருக்கும் நவீன் பில்டர்ஸ் நிறுவனத்தின் 36 ஆண்டு கால வளர்ச்சிப் பாதையை மெய்யான நம்பிக்கையுடன் விவரித்த இயக்குநர் பவானி பாராட்டுக்குரியவர். - அ.செல்வராஜ், கரூர்.
*ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் மூன்று பெண்களான ஊர்மிளா, கிரண், ஷீலாபடேல் பாராட்ட வயதில்லை. சாதனைக்கு வயது தடையில்லை என்பதை தெரிந்து கொண்டோம். வாழ்த்துகள். - எஸ்.பிரீத்தி, செங்கல்பட்டு.
*உத்ரகாண்டில் தேசிய அளவில் நடைபெற்ற 400 மீட்டர் தடைதாண்டும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஸ்ரீவர்த்தினியின் தனித்துவம் வாய்ந்த பேச்சை கவனிக்கும் போது அவர் மேலும் மேலும் வெற்றிகளை குவிப்பார் என்பது நன்றாக புலப்படுகிறது. - ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.
*மகத்தான சேவை செய்து வரும் பேட்மேன் ஆஃப் ஜார்கண்ட தருண்குமாரை பாராட்ட வார்த்தைகள் இல்லை. - பானுமதி வாசுதேவன், மேட்டூர்.
அட்டைப்படம்: நிக்கி கல்ராணி புகைப்படம்: கேமரா செந்தில்
|