அட்மிஷன்
அது ஒரு தனியார் பள்ளி.அங்கே மழலையர் வகுப்பில் அட்மிஷன் வேண்டி ஏராளமான பெற்றோர், அவரவர் குழந்தையுடன் வரிசையில் காத்திருந்தனர். ‘இடம் கிடைக்குமோ, கிடைக்காதோ’ என்ற கவலை எல்லோர் முகத்திலும்.நேர்முகம் தொடங்கியது. முதலில் ஒரு பெற்றோர்,
 கடவுளை வேண்டியபடி குழந்தையுடன் அறைக்குள் சென்றனர்.குழந்தையைப் பார்த்துப் புன்னகைத்தபடி சாக்லெட் தந்தார் பிரின்சிபால். குழந்தை சந்தோஷமாக வாங்கி வாய்க்குள் போட்டுக்கொண்டது. ‘‘குட்மார்னிங்’’ என்றார் பிரின்சிபால்.
‘‘குட் மார்னிங் சார்!’’ ‘‘வாட் ஈஸ் யுவர் நேம்?’’ ‘‘மை நேம் ஈஸ் ரவி’’ ‘‘நர்சரி ரைம்ஸ் ராகத்தோட பாடத் தெரியுமா?’’
‘‘ஓ... தெரியுமே! ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்...’’ ‘‘வெரி குட்! ஏ.பி.சி.டி. வரிசையா சொல்ல முடியுமா?’’ ‘‘எனக்கு எழுதவும் தெரியும். சொல்லவும் தெரியும்...’ ‘‘பரவாயில்லையே! ஒன்... டூ... த்ரீ வருமா?’’
‘‘அதுவும் ஆயிரம் வரைக்கும் கடகடன்னு வரும்!’’‘‘கூட்டல், கழித்தல், வகுத்தல் தெரியுமா?’’‘‘தெரியும்!’’கடைசியாய் பிரின்சிபால் சொன்னார்... ‘‘ஓகே, பரவாயில்லை! பையனோட அப்பாவான உங்களுக்கு ஓரளவு எல்லாமே தெரிஞ்சிருக்கு! வீட்டில் அவனைக் கவனிப்பீங்கன்னு நம்பி, உங்க பையனுக்கு அட்மிஷன் தர்றோம்!’’
எஸ்.குமாரகிருஷ்ணன்
|