ஜோக்ஸ்
‘‘ஆஸ்பத்திரிக்கு இருந்த பழைய பெயரை மாத்திட்டு, ஏன் புதுசா வந்த நர்ஸ் பேரை வச்சிருக்கறீங்க டாக்டர்?’’
 ‘‘நஷ்டத்துல ஓடுன ஆஸ்பத்திரி, அவங்க வந்த பிறகுதான் லாபத்துல ஓடுது!’’ - வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
‘‘கட்சியின் சார்பாய் அனைவருக்கும் இலவசமாய் செல்போன் வாங்கிக் கொடுத்தும், ஒருத்தரும் மிஸ்டுகால் கொடுத்து கட்சியில் சேராததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்!’’ - பெ.பாண்டியன், காரைக்குடி.
லைட்டா டீ வேணும்னு கேட்கிறவங்க கிட்ட, அது எத்தனை வாட்ஸ்னு கேக்க முடியுமா? - ஓசி டீ குடித்துவிட்டு ஓசி தம்மும் கேட்போர் சங்கம் - பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.
‘‘1985க்கு முன்னாடி அரசியல் களம் கண்ணியமா இருந்துச்சுனு எதை வச்சு சொல்றே?’’ ‘‘அந்த வருஷம் நீங்க அரசியலுக்கு வந்ததை வச்சுதான் தலைவரே..!’’ - சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.
‘‘தலைவரே... கம்பி ஜோசியர் வந்துருக்கார்!’’ ‘‘என்னய்யா சொல்றே?’’ ‘‘நீங்க கம்பி எண்ணப் போறதை முன்கூட்டியே கணிச்சு சொன்ன ஜோசியர் வந்துருக்கார்னு சொன்னேன்!’’ - ஆர்.சீதாராமன், சீர்காழி.
‘‘அரசியல்ல நான் தனிமரமா ஆகிட்டேன்யா..!’’ ‘‘சத்தமா சொல்லாதீங்க தலைவரே... எவனாவது வெட்டிடுவான்!’’ - அம்பை தேவா, சென்னை-116.
‘‘ஆஸ்பத்திரியில டாக்டருக்கும்
நர்ஸுக்கும் என்ன வாக்குவாதம்?’’ ‘‘பேஷன்ட்டோட பல்ஸை யாரு செக் பண்றது, பர்ஸை யாரு செக் பண்றதுன்னுதான்..!’’ - யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.
|