எனக்குப் போட்டி நயன்தாராவா? சமந்தாவா?



ஹன்சிகா அதிரடி

முன்பைவிட மெருகேறி இருக்கிறார் ஹன்சிகா. ‘ரோமியோ ஜூலியட்’ ரிலீஸுக்கு ரெடியாக இருக்க, இப்போது விஜய்யின் ‘புலி’ ஷூட்டிங்கும் கிட்டத்தட்ட ஓவர். கிடைத்த கேப்பில் மும்பை வீட்டில் முரட்டு மாடல் ட்யூக் பைக் ஓட்டிக் கொண்டிருக்கிறார். ‘புலி’க்காக கம்போடியா சென்று வந்த குதூகலம் குறைவில்லாமல் வழிகிறது பேச்சில். ‘‘நமஸ்தே...’’ என நமக்குத் தெரிந்த இந்தியில் தாளம் போட்டால்... ‘‘வணக்கம்... எப்படி இருக்கீங்க?’’ எனக் கொஞ்சுகிறது கிளி!

‘‘எப்படிப் போச்சு சம்மர்?’’

‘‘சென்னை ஹாட்னு கேள்விப்பட்டேன். ‘புலி’ ஷூட்டிங் புண்ணியத்தில் நான் எஸ்கேப். போன வருஷம் நான் தத்து எடுத்து வளர்க்கிற குழந்தைகளை சம்மர் ஹாலிடேஸுக்காக குலுமணாலி அழைச்சிட்டுப் போயிருந்தேன். இந்த வருஷம் முழுக்க ஷூட்டிங்ல பிஸி. ஆனாலும் இந்த சம்மர் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். புதுசா, 5 குழந்தைகளைத் தத்து எடுத்திருக்கேன். இதோட 30 பேர் எங்க ஃபேமிலியில சேர்ந்துட்டாங்க. இந்த வருஷத்துல எப்படியும் அந்தக் குழந்தைகளை கண்டிப்பா டூர் அழைச்சிட்டு போவேன்!’’
‘‘எப்படி வந்திருக்கு ‘புலி’?”

‘‘சூப்பர்ப்! ‘வேலாயுதம்’ படத்திற்கு அப்புறம் விஜய் சார் கூட சேர்ந்து நடிச்சிருக்கேன். இப்படி ஒரு படம் கிடைச்சது என்னோட அதிர்ஷ்டம். தேவி மேம் ரொம்ப அழகா இருக்காங்க.  பாலிவுட்ல அவங்க அவ்ளோ பாப்புலர். ‘மூன்றாம் பிறை’ ஹிந்தி ரீமேக்கை நான் பல தடவை பார்த்திருக்கேன். அவங்க ரசிகை நான். மும்பையில அவங்களை சில ஃபங்ஷன்ஸ்ல பார்த்திருக்கேன்.

ஆனா, பேசினதில்லை. இந்தப் படத்தில அவங்களோட சேர்ந்து நடிச்சது ஸ்வீட் சர்ப்ரைஸ்!
படத்துல அவங்க மகாராணி. நான் அவங்களோட மகள். செல்ல இளவரசி. என் காஸ்ட்யூம்ஸ், நகைகள் எல்லாம் எனக்கே பிரமிப்பா இருந்துச்சு. ஒரு இளவரசியா நானே உணர்ந்தேன். தேவி மேம்கிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். ‘நீ நிஜமாவே பிரின்சஸ் மாதிரி இருக்கே ஹன்ஸ்’னு என்னை வாழ்த்தினாங்க!’’
‘‘வேலாயுதம்’ விஜய் - ‘புலி’ விஜய் - யார் பெஸ்ட்?’’

‘‘நைஸ் கொஸ்டீன். ‘வேலாயுதம்’ல நடிக்கறப்ப நான் ‘மாப்பிள்ளை’, ‘எங்கேயும் காதல்’ மட்டும்தான் முடிச்சிருந்தேன். ஃபீல்டுக்கு ரொம்பப் புதுசு. விஜய் சார் ஒரு மாஸ் ஹீரோ. அந்த பந்தா இல்லாம எளிமையா பழகினார். இப்பவும் அதே டவுன் டு எர்த் பர்சனா இருக்கார். ஆனா என்ன... ஒவ்வொரு வருஷமும் அவர் அழகாயிட்டே போறார். அவரோட பியூட்டி சீக்ரெட் என்னான்னு தெரியலை!’’

‘‘என்ன சொன்னார் விஜய்..?’’
‘‘ ‘புலி’ ஷூட்டிங்ல இருந்ததே வேறொரு உலகத்தில் இருந்த மாதிரி இனிமையான அனுபவம். ஒரு சீன்ல தமிழ்ல கவிதை மாதிரி டயலாக். ரொம்பவும் நீளமான டயலாக் அது. எனக்கு இன்னும் தமிழ் அவ்ளோ சரளமா வரலை. ஆனாலும் அந்த டயலாக்கை ஒரே டேக்ல பேசிட்டேன். விஜய் சாருக்கு அது சர்ப்ரைஸ். எனக்கு செம பாராட்டு தெரியுமா! கம்போடியாவில் விஜய் சார் காம்பினேஷனில் டூயட் பண்ணியிருக்கேன். அங்கே பழமையான ஒரு கோயில்லதான் ஷூட்டிங். இந்த மாதிரி புனிதத் தலங்களை சுத்திப் பார்க்குறது எனக்கு ரொம்பப் பிடிக்கும்!’’ 

‘‘ ‘ரோமியோ ஜூலியட்’ல ஜூலியட் பத்தி சொல்லுங்க?’’‘‘அந்தப் படத்துல நடிச்சது இனிமையான அனுபவம். ‘எங்கேயும் காதல்’ படத்துக்கு அப்புறம் ‘ஜெயம்’ ரவி கூட நடிச்சிருக்கேன். இதில் என்னோடது ஒரு வித்தியாசமான கேரக்டர். க்ளைமாக்ஸ் ஷூட் தொடர்ந்து 3 நாளா நைட்லதான் நடந்தது. சாயங்காலம் 6 மணிக்கு தொடங்குற படப்பிடிப்பு மறுநாள் காலையிலதான் முடியும். 3 நாள் ராத்திரி முழுக்க தொடர்ந்து அழுது அழுது நடிச்சேன். என் பர்ஃபார்மென்ஸ் பார்த்துட்டு, ‘வெரிகுட் ஹன்சிகா’ன்னு படத்தோட டைரக்டர் லக்‌ஷ்மண் சாரே பாராட்டினார்!’’

‘‘முக்கால் பேட்டி முடிஞ்சுது. இனி கோவப்பட்டா பரவாயில்ல. தமிழ்ல உங்களுக்குப் போட்டி நயன்தாராவா? சமந்தாவா?’’‘‘ஹலோ, எனக்கு கோவமெல்லாம் வராது. இப்போ நான் நிறைய படங்கள்ல நடிக்கறேன். பிஸியா போகுது லைஃப். நல்ல கேரக்டர்கள் நிறைய பண்றேன். நான் ஏன் அவங்களைப் போட்டியா நினைக்கணும்? அதையெல்லாம் யோசிக்க டைம் இல்லை. என்னோட வொர்க்ல மட்டும் கவனம் செலுத்துறேன்!’’
‘‘ஹன்சியோட பர்சனல் தெரிஞ்சுக்கலாமா?’’

‘‘ஓயெஸ்! சாக்லெட்ஸ் ரொம்ப  பிடிக்கும். ஷாப்பிங்ல முதல் சாய்ஸ், ஹேண்ட்பேக்ஸும் வித வித வாட்ச்களும்தான். இதுல எங்கிட்ட எக்கச்சக்க கலெக்‌ஷன்ஸ்  இருக்கு. வீட்ல ஸ்குவாஷ் விளையாடுறேன். கிடைக்கற டைம்ல யோகா பண்றேன்.   சமீபத்துல நான் ஸ்லிம் ஆனதுக்குக்கூட இதுதான் காரணம். தமிழ்நாட்டுக்கு வந்தா இட்லி - சாம்பார் ஃபேவரிட். இப்ப பைக் ரைடிங்  ரொம்பப் பிடிச்சிருக்கு. ஸோ, புதுசா டியூக் பைக் வாங்கியிருக்கேன். மும்பையில  ஹெல்மெட் போட்டுட்டு பைக்ல படுவேகமா ஒரு பொண்ணு போனா, அது நான்தான்னு  கன்ஃபார்ம் பண்ணிக்காதீங்க. எங்க வீட்டைச் சுத்தி மட்டும்தான் ஓட்டுறேன். அதுக்கே டைம் கிடைக்க மாட்டேங்குதுப்பா..!’’

- மை.பாரதிராஜா