ஆல்தோட்ட பூபதி





வாசகர்களுக்காக மிக மிக சிரமப்பட்டு, பிரபலங்கள் ஸ்கூலில் படிக்கும்போது எழுதிய லீவ் லெட்டர்களை கண்டுபிடித்து பிரசுரித்திருக்கிறோம். இனி உங்க பாடு.

‘ஆல் இன் ஆல்’
அழகுராஜா,
ஐந்தாம் வகுப்பு,
அவ்வையார்
ஆரம்பப் பாடசாலை
‘‘டேய் டமர டக்க வாயா! நீயெல்லாம் ஒரு வாத்தியாராடா? ஏய் கொய்யாக்கா தலையா, உன் மூஞ்சி எனக்கு புடிக்கலடா. என்னால ஸ்கூலுக்கு வர முடியாது. போடா, கோமுட்டி தலையா! ஆண்டவா, என்னை ஏன் இது மாதிரி பிசினாறி பள்ளிக்கூடத்துல எல்லாம் சேர்த்து விடுறே. ஐயோ ராமா..!’’

வீராசாமி,
ஐந்தாம் வகுப்பு, க(«)ர(£)டியா
உயர்நிலைப் பள்ளி, வண்டலூர்.
‘‘வாத்தியாரம்மா வணக்கம், எனக்கு ரெண்டு நாளா சுணக்கம்... வேர் இஸ் யுவர் டாட்டரு? அதான் இப்ப மேட்டரு! உங்க டாட்டர பார்க்காம எனக்கு நோவு, அதான் இன்னைக்கு லீவு... ஏய் டண்டணக்கா, ஏய் டனக்குணக்கா!’’

போக்கிரி,
இரண்டாம் வகுப்பு, திருப்பாச்சி நடுநிலைப் பள்ளி, சிவகாசி.
‘‘ண்ணா, வணக்கங்கண்ணா. நான் போக்கிரி எழுதறேங்கன்னா. நேத்து மதுர முத்துபாண்டி கிரவுண்டுல கபடி மேட்ச்ங்கண்ணா. சும்மா கில்லி கில்லி கில்லி மாதிரி ஆடுறப்போ, கீழ சில்லற வாரி கால் உடைஞ்சு போச்சுங்கண்ணா. அதனால, நான் இன்னிக்கு ஸ்கூலுக்கு வர்லங்ணா. ண்ணா, யாரு ஸ்கூலுக்கு மொதல்ல வர்றான்றது முக்கியமில்லங்ணா... யாரு சீக்கிரம் வூட்டுக்குப் போறான்றதுதான் முக்கியம்ங்ணா. வர்ட்டுமாங்ணா?’’

கைப்புள்ள,
ஆறாம் வகுப்பு, நாய் சேகர் நினைவு துவக்கப்பள்ளி, கட்டதுரைபுரம்.
‘‘ஹல்ல்லோ, நான் வருத்தப்படாத வாலிபர் சங்கத் தலைவர் கைப்புள்ள எழுதறேன். எங்க வாத்தியார் ஜாக் இருக்காரா? ஏய், ஏய் மிஸ்டர், இது லவ் லெட்டர் இல்ல, லீவ் லெட்டர். நேத்து பத்து பாஞ்சு பேரு, அந்த முக்குல இருக்குற மூத்திர சந்துல வச்சு என்ன நொக்கி நோம்பி எடுத்துப்புட்டாய்ங்க. நான் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டேனாம். அதனால, ஐ ஆம் சிங் இன் த ரெயின்... ஐ ஆம் சொய்ங் இன் த ரெயின்...’’

சேதுபதி,
பத்தாம் வகுப்பு,
ஙி செக்ஷன், காவலர் குடியிருப்பு உயர்நிலைப் பள்ளி, செங்கோட்டை.
‘‘ஏய் புள்ள டீச்சரு! தமிழ்நாட்டுல இருக்கறது மொத்தம் 21698 பள்ளிக்கூடம். அதுல ஆரம்பப் பள்ளி 14356, நடுநிலைப் பள்ளி 4415, உயர்நிலைப் பள்ளி 2927. மொத்தமா படிக்கிற குழந்தைங்க 674857. அதுல ஆம்பள குழந்தைங்க 389748; பொம்பள குழந்தைங்க 285109. இதுல நான் ஒருத்தன் வராட்டி ஒரு தப்பும் இல்ல. அதான் போட்டேன் லீவு! மொதல்ல அவங்களுக்கு புரியுற மாதிரி பாடம் எடுங்க. வரட்டா, ஆங்!”


நயம்பட பேசு

இந்தியாவின் பொருளாதார தலைநகரமும், குற்றங்களின் தலைநகரமுமான மும்பையில், காவல்துறை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செயலை சென்ற வாரம் செய்திருக்கு. அதாவது... செயினு பறிக்கிறவன், ஏடிஎம்மை தூக்குறவனையெல்லாம் விட்டுட்டு, அந்த ஊரு லிணீuரீலீவீஸீரீ நீறீuதீஐ தடை பண்ணியிருக்கு. பல்லு தெரிய சிரிச்சா உடம்பு டல் அடிக்காதுன்னு ஊருக்கு ஊர் கிளப் ஆரம்பிச்சு ஜாலியா சிரிக்கப் பார்க்கறாங்க. அதையும் அங்க தடை பண்ணக் காரணம்..? அவங்க பார்க், பீச், நண்பர்கள் வீடுன்னு போயி சத்தமா சிரிக்கறாங்களாம். அடுத்தவங்களுக்கு இவங்க சிரிப்பு தொந்தரவா இருக்காம்!

ஆக, நாட்டுல நம்ம பொழப்பு சிரிப்பா சிரிச்சாலும்... நாம சிரிக்க சுதந்திரம் இல்லை!
என்னய்யா நடக்குது இந்த தேசத்துல? ரத்தமா, பான் பராக்கான்னு தெரியாம நடுரோட்டுல துப்பி வைக்கிறவனையும், சென்டர் மீடியன்ல உச்சா போயிக்கிட்டே ஃபாரினருக்கு ரூட் சொல்றவனையும் விட்டுடறீங்க... சிரிக்கறவங்களைப் போய் புடிக்கிறீங்களே? அவிங்க என்ன கூலிப் படையா... சந்தோஷம் இல்லாட்டியும் சிரிச்சு வைக்கிற ஜாலிப்படைதானய்யா!

இப்படியே போனா அடுத்து கொட்டாவி விடுறவன், தும்முறவன், விக்குறவன், இருமுறவன்னு அத்தனை பேரு கன்னத்துலயும் கைரேகை பன்ச் பண்ணிருவீங்க போலிருக்கு. அடுத்து ஒவ்வொரு காலேஜா போனீங்கன்னா, இந்த சைட்டடிக்கிறது, கடலை போடுறது, மொக்கை போடுறதுக்கெல்லாம் தடா, பொடா போட்டு கெடா வெட்டி விட்ருங்க. அதை முடிச்சுட்டு, ஒவ்வொரு வீடா போனீங்கன்னா நகம் வெட்டுறது, மூஞ்சி கழுவறது, குளிக்கறது, கக்கா போறதுக்கெல்லாம் ஒரு தடைய போட்ருங்க. அப்படியே டைவர்ஷன் எடுத்து டாஸ்மாக் பக்கம் போனா... ஏப்பம் விடுறது, வாந்தி எடுக்கறது, மட்டையாகறது போன்ற குடிமகன்களின் உரிமைகளிலும் கல்லத் தூக்கி போட்றலாம். உலகின் பெரிய ஜனநாயக நாட்டுல, இப்படியாய்யா சிரிக்கும் உரிமைகளைக் கூட பறிப்பீங்க? இருங்கய்யா, நடிகர் பிரபுவோட கால்ஷீட் வாங்கி, உங்களுக்கு எதிரா புரட்சி பண்ண வைக்கிறேன்!


*   ‘‘உங்க பையன் என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?’’
‘‘இப்போதைக்கு ......... தான் இருக்கான்!’’
*   ‘‘நீங்க அழகா இருக்கீங்க...’’
‘‘......... சொல்றீங்களா? இல்லை உண்மையாவா?’’
‘‘அட இல்லீங்க... நான் ......... கிண்டல் பண்ணினேன்!’’
*   ‘‘ஏண்டா மச்சான் கிரிக்கெட் விளையாட வரல, பிசியா?’’
‘‘இல்ல மச்சான் ......... தான்!’’
*   ‘‘ஏன்யா... என் மச்சினியவே பார்க்குற?’’
‘‘......... பார்த்தேம்பா... இது தப்பா?’’
*   ‘‘தரே மேலே கால் படாம ......... பறந்து பறந்து அடிப்பேன்!’’
*    ‘‘ஆபீஸ் எப்போங்க முடிஞ்சது?’’
‘‘ஏன் கேக்குற?’’
‘‘இல்ல... .........தான்!’’
* ‘‘......... திட்டுனேன் சார், கோவிச்சுக்கிட்டு இப்படி பண்ணிட்டான்!’’

*   ‘‘வேணாம், ......... இரு, அப்புறம் உனக்குத்தான் கஷ்டம்!’’
*   ‘‘கொஞ்ச நேரம் ......... இருடா, ஒரு மண்ணாங்கட்டியும் புரியல!’’

மேலே இருக்கும் எந்த வாக்கியத்துக்காவது சரியா அர்த்தம் விளங்குதா நட்பூஸ்? விளங்காது. ஏன்னா, தமிழ்ல ‘சும்மா’ங்கிற வார்த்தையை மட்டும் நாம சும்மா சும்மா பயன்படுத்தலன்னா, சுத்தமா நாம பேசுறது நமக்கே புரியாது. சும்மா சொல்லல, சீரியஸா சொல்றேன். தமிழ் வாழ்க. தமிழ் வளர்க!
(பேசுவோம்)

கிச்சு கீச்சு

டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு குறைந்திருக்கலாம், ஆனால் இந்திய மக்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு உயர்ந்திருக்கிறது
# முட்டை ரூ. 3.22

நடிகை நமீதாவை புடவை கடை திறப்பு விழாவிற்கு கூப்பிடுகிறார்கள்; இது புடவையை அவமானப்படுத்தவா? நமீதாவை அவமானப்படுத்தவா?

சொல்லாத காதலால் ஏமாந்தவர்களை விட, செல்லாத ரூபாய் நோட்டு வாங்கி ஏமாந்தவர்கள் அதிகம்!