துப்பறியும் ஆனந்தனாகும் : சூர்யா...





சூர்யாவுக்கு இன்னொரு போலீஸ் ஸ்டோரியை ரெடியாக்கியிருக்கார் கவுதம் வாசுதேவ் மேனன். ‘துப்பறியும் ஆனந்தன்’னு தலைப்பு வச்சிருக்க படம், ‘யோஹனு’க்குப் பிறகு 2013ல டேக் ஆஃப் ஆகுமாம். ஏற்கனவே ‘தல’க்கு சொன்ன கதைதானே..?

இ ந்த மாசம் 22க்கு ரிலீசாகும்னு எதிர்பார்க்கப்பட்ட ‘பில்லா 2’வை டெக்னிக்கல் காரணங்களுக்காக ஒண்ணு, இல்லாட்டி ரெண்டு வாரங்கள் தள்ளி ரிலீஸ் பண்ண இருக்காங்க. ‘பில்லா’ எப்ப வந்தாலும் ‘கல்லா’ கட்டிடுவார்னு நம்பலாம்..!

அதேபோல ஏகப்பட்ட சி.ஜி வேலைகளை உள்ளடக்கிய ‘நான் ஈ’ படமும் எதிர்பார்த்ததுக்கும் மேல டிலே ஆனாலும், கண்டிப்பா ஜூலை 6ல தியேட்டருக்கு வந்துடும்னு டைரக்டர் ராஜமௌலியே ஸ்டேட்மென்ட் விட்டிருக்கார். ‘ஈ’ பிடிக்க இத்தனை நாளா..?

‘தாண்டவத்’துக்காக லண்டன் போன லக்ஷ்மி ராய் ‘ஹோட்டல் ரூமுக்கு தகராறு பண்ணிச்சு... தனி ஃபிளைட்டுல சென்னைக்கு வந்துச்சு’ன்னு ரூமர்ஸ். சென்னை வந்ததும் லக்ஷ்மி பண்ணிய முதல் வேலை, அதுக்கெல்லாம் மறுப்பு அறிக்கை தந்தது. குட் கேர்ள்..!

கிட்டத்தட்ட 15 வருஷங்களுக்குப் பிறகு சௌகார் ஜானகியை ‘வானவராயன் வல்லவராயன்’ படத்துல நடிக்க வைக்கிறார் டைரக்டர் ராஜ்மோகன். ‘கழுகு’க்குப் பிறகு கிருஷ்ணா ஹீரோவாகிற படம் இது.


தங்கத்துக்கு 916 தர நிர்ணயம் போல மோனிகாவுக்கும் மாலிவுட் படம் தர நிர்ணயம் தந்திருக்கு. மலையாளத்துல தயாராகிற ‘916’ங்கிற படத்துல மோனிதான் ஹீரோயின். மோனிகாவை சொக்கத்தங்கம்னு சொல்லாம சொல்றாங்களா..?
பாடலாசிரியர்களுக்கெல்லாம் நடிப்பு மேல ஒரு மோகம் இருக்கத்தான் செய்யுது. பாடலாசிரியர் நந்தலாலாவும் இப்ப நடிக்க வர்றார், ‘இவன் யாரோ’ படத்துல. ஒரு ஆறுதல்... இவர் ஹீரோவாகாம, ஹீரோவுக்கு அப்பாவாகிறது!

ஷூட்டிங் இல்லாத நேரங்கள்ல ஆந்திரா பக்கம் பறந்துடறார் ஹீரோ ஷாம். அதுக்காக ஏதேதோ கற்பனை செய்துக்க வேண்டாம். அங்கே ஒரு ஆசிரமத்தில தங்கி மெடிடேஷன் பண்றாராம். சின்சியர் சில் அவுட்..!
 கோலிவுட் கோயிந்து

சைலன்ஸ்



சிரிக்க சிரிக்க கதை சொல்ற அந்த பதி பாண்டியன் ஒரு தெலுங்குப்படம் பண்ற வேலைகள்ல இருந்தார். நம்ம தாராவும், டோலிவுட் கோபியும் நடிக்க இருந்த படத்துக்குக் கதை ரெடி பண்ணிக்கிட்டே...ஏ...ஏ இருந்தவர், செகண்ட் ஆஃப் கதை சொல்ல முடியாம காலம் தாழ்த்திக்கிட்டிருக்க... ‘இப்ப படம் பண்ற சூழ்நிலை இல்லை, பிறகு பார்க்கலாம்’னுட்டாங்களாம் தயாரிப்பு தரப்பு. வட போச்சே..!

இந்தப் படமும் அதே கதைதான். அதாவது அதே ஸ்கிரிப்ட்னு அர்த்தப்படுத்திக்க வேண்டாம். அதே நிலைமையுள்ள இன்னொரு படம். அந்த விசால ஹீரோவை வச்சு, வளர்ந்த சி(ரிப்பு) டைரக்டர் எடுக்கிற படமும் பாதி வளர்ந்த நிலைமையில ‘இப்போதைக்கு தொடர கைல காசு இல்லை’ன்னு தயாரிப்பு கை விரிக்க... அடுத்து என்னன்னு தெரியாம நிக்குதாம். டைட்டில்ல மட்டும் தலைவர் இருந்தா போதுமா..?