தத்துவம் மச்சி தத்துவம்





‘‘தலைவர் அரசியலுக்கு வந்தும் இன்னும் சினிமாவை மறக்கலைன்னு எப்படிச் சொல்றே..?’’
‘‘கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கணும்னாகூட, அவங்களை நடிச்சுக் காட்டச் சொல்றாரே..!’’
 பெ.பாண்டியன், காரைக்குடி.


‘‘ஒரு டாக்டர் பரபரப்பான அரசியல்வாதியா இருந்தா இப்படித்தான் ஆகும்...’’
‘‘என்ன விஷயம்..?’’
‘‘ஹாஸ்பிட்டல்ல லேபர் வார்டுல கூட ஒரு கவுன்சிலரை நியமிச்சிருக்கார்...’’
 அம்பை தேவா, போரூர்.


‘‘மன்னா! விடியற்காலையில் சேவல் கூவும் வேளையில் போர் துவங்கி விடும்...’’
‘‘அப்படியானால் அந்த சேவலை இப்போதே கொன்று விடுங்கள் அமைச்சரே!’’
 க.கலைவாணன், திருத்தணி.


‘‘நம்ம கட்சி புது மகளிரணித் தலைவியோட பேரு காவியான்னு எப்படிக் கண்டுபிடிச்சே..?’’
‘‘தலைவரை ‘காவியா நாயகனே வருக’ன்னு வரவேற்று பேனர் வச்சுருக்காங்களே... அதை வச்சுத்தான்!’’
 உ.குணசீலபாண்டியன்,
ராஜபாளையம்.


என்னதான் ஒருத்தர் பணமில்லாம பாக்கெட்டை எம்ப்டியா வச்சிருந்தாலும், அதுக்காக அவரை ‘காலிப்பய’ன்னு சொல்ல மாட்டாங்க!
 காலி டிரெயினில் கால் நீட்டி அமர்ந்து யோசிப்போர் சங்கம்
 பர்வீன் யூனுஸ், சென்னை44.


என்னதான் மாம்பழத்துல நார்ச்சத்து இருந்தாலும், அந்த நாரை வச்சு பூ கட்ட முடியாது. ஆப்பிள்ல மாவுச்சத்து இருந்தாலும், அதை வச்சு தோசை சுட முடியாது. பேரீச்சம்பழத்தில இரும்புச் சத்து இருந்தாலும், அதை வச்சு ஒரு சின்ன குண்டூசி கூட செய்ய முடியாது!
 பழம் சாப்பிடும்போது பலமாக யோசிப்போர் சங்கம்
 ஜி.தாரணி, அரசரடி.


‘‘திருட்டு பயமே இல்லாத இந்த ஏரியாவுக்கு புது இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர்ல
வந்ததும் ஏன் எல்லோரும் பயப்படறீங்க..?’’
‘‘அவா,¢ தன் கூடவே திறமையான திருடர்கள் நாலு பேரைக் கூட்டி வந்திருக்காராம்...’’
 சரவணன், கொளக்குடி.