புத்தகம் கூடுகள் சிதைந்தபோது ஸீ அகில்



ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் அகில், 14 சிறுகதைகள் மூலம் போர்ச்சூழலை ஒட்டிய ஈழத்தின் நெருக்கடியான வாழ்வியல் அனுபவங்களையும், அவலங்களையும் காட்சிப்படுத்துகிறார். குறிப்பாக ‘பதவி உயர்வு’, ‘கூடுகள் சிதைந்தபோது’ ஆகிய கதைகளின் துயரங்கள் இதயத்தை இளகச் செய்கின்றன. அகிலின் உறுத்தலற்ற ஈழத்து மொழிநடை இடைஞ்சலின்றி நம்மை அந்தச் சூழலுக்கே அழைத்துச் செல்கிறது. பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, கலாநிதி க.குணராசா, கலாநிதி நா.சுப்பிர மணியன் ஆகியோரின் அணிந்துரைகள் சிறுகதை இலக்கியத்தின் மீதான நுட்பமான பார்வையைப் பதிவுசெய்கின்றன.

(பக்கங்கள் 184, விலை: ரூ.120, வெளியீடு: வம்சி புக்ஸ், 19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை-606601. பேச: 9444867023.)

வந்தாச்சு வலை

போட்டோ எடுக்க தொழில்நுட்பமும் வசதியும் இல்லாத அந்தக் காலத்தில் தங்களை ஓவியமாக வரைந்து கொண்டார்கள். இன்று செல்போனிலும் கேமரா வந்தபிறகு ஓவியம்தான் அரிதாகிவிட்டது. ஓவியம் வரையும் படைப்பாளிகளை பதைபதைக்க வைக்கும் ‘துடைப்பாளி’தான் ஷ்ஷ்ஷ்.தீமீயீuஸீளீஹ்.நீஷீனீ என்ற இந்தத் தளம். ‘உங்களை போர்ட்ரைட்டை ஓவியமாகத் தீட்ட வேண்டுமா? உங்கள் போட்டோவைக் கொடுங்கள்... அதையே நாங்கள் அப்படி இப்படி டிங்கரிங் தட்டி பக்கா ஓவியமாக்கித் தருகிறோம்’ என்கிறார்கள் இவர்கள். 

கணினியில் இருக்கும் நம் புகைப் படத்தை இந்தத் தளத்தில் அப்லோடு செய்தால் போதும்... பென்சில் ஆர்ட், வாட்டர்   கலர் என்று நமக்கு   வேண்டிய எஃபெக்ட்டுகளைத் தேர்ந்தெடுத்து முடித்தால், ஓவியமாக்கப்பட்ட நம் படத்தை மீண்டும் நம் கணினியிலேயே சேமித்துக் கொள்ள முடியும். ‘நானே வரைஞ்சது’ என்று புருடா விட்டுக் கொள்ளவும் முடியும்!
இது ‘தல’ ஓவியம்...

இதழ் ஆழம்

அழகிய வடிவமைப்பு, ஆழமான உள்ளடக்கங்களோடு கருத்தைக் கவரும் இந்த இதழ் கிழக்கு பதிப்பகத்தில் இருந்து வெளி வருகிறது. தமிழக அரசின் 300 நாள் செயல்பாடுகள் குறித்த விமர்சனம், இலங்கைக்கு எதிரான ஐ.நா தீர்மானத்தின் விளைவுகள், வறுமைக்கோடு பற்றிய திட்டக்குழுவின் தடுமாற்றங்கள், மாயாவதியின் அரசியல் பின்னடைவு, அகிலேஷ் யாதவின் அதிரடி அரசியல் என இதழ் முழுவதும் கனமான கட்டுரைகள். கூடங்குளம் பற்றிய செல்லமுத்து குப்புசாமியின் கட்டுரை, அவ்விவகாரத்தின் ஒட்டுமொத்த தன்மைகளையும் உள்ளடக்கிய ‘ஸ்கேனிங் ரிப்போர்ட்’. திராவிட இயக்கம் பற்றிய மா.நன்னனின் பேட்டியும் குறிப்பிடத் தகுந்தது.
(ஆசிரியர்: பத்ரி சேஷாத்ரி, தனி இதழ்: ரூ 25, வருட சந்தா: ரூ 300. முகவரி: எண்-177/103, முதல் தளம், அம்பல்ஸ் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14.
பேச: 044-42009603.)