தமிழன்டா!



அ15 ஆயிரம் ரூபாய்க்கு மொபைல் வாங்கி அதில் அடுத்தவனுக்கு மிஸ்டு கால் கொடுத்தா,

அபஸ்ஸில் ஆரம்பித்து விமானம் வரை ஜன்னலோர சீட்டில் உட்கார ஆசைப்பட்டா,

அதேங்கா சட்னி தொட்டுக்காம இட்லி திங்கமுடியாதுன்னா,
உளுந்து வடைய தின்னுக்கிட்டே 'ஒபாமா பண்றது தப்பு'ன்னு ஒலக அரசியல் பேசினா,

அ10 லட்ச ரூபா காரு ரெண்டு ரூபா எலுமிச்சையாலதான் ஓடுதுன்னு நம்பினா,

அசனி பகவானும் குரு பகவானும் பேட்டையும் பந்தையும் வச்சு வாழ்க்கையில விளையாடிக்கிட்டு இருக்காங்கன்னு நினைச்சா,

அஓட்டலுக்கு போயி மெனு கார்ட பார்க்காம அடுத்தவன் திங்கிறதையே வேடிக்கை பார்த்தா
,
அவயித்துல இடமில்லாட்டியும் கடைசியா ஆஃப்பாயில் சாப்பிட்டு ஃபுல்ஸ்டாப் வச்சா,

அபொறக்குற குழந்தைகளுக்கு 'ஷா', 'ஹா'ன்னு எழுத்து வர்றமாதிரி பேரு வைக்க மண்டைய குழப்பினா,

அகரன்ட் வரும் போகும் நேரத்த சரியா தெரிஞ்சு வச்சிருந்தா,
பெட்ரோல் விலை 50 காசு ஏறப்போகுதுன்னு மொதநாளு நைட்டு க்யூல நின்னு டேங்க நிரப்புனா,

அபஸ்ல 3.75 காசு டிக்கெட்டுக்கு நூறு ரூபா எடுத்து சீன் போட்டா,

அமுகப்பருவ பார்த்துட்டுக்கூட 'கேன்சரா இருக்குமோ'ன்னு பயந்தா,

அகாய்கறிக்காரங்ககிட்ட ரெண்டு ரூபாய்க்கு ஒரு மணி நேரம் பேரம் பேசினா,

அவெறும் ஊறுகாவ வச்சே ஒரு ஃபுல் அடிச்சா,

அபேச ஆரம்பிக்காத குழந்தைகிட்டயும் 'நீ அப்பா புள்ளையா, அம்மா புள்ளையா'ன்னு டெர்ரர் காட்டினா,

அ தமிழைத் தவிர மத்த எல்லா மொழியையும் சரியா பேசுனா...
பெருமையா சொல்லிக் கொள்ளு உறவே... நீயும் தமிழ்கூறு நல்லுலக தன்மான தமிழன்தான்!
(பேசுவோம்...)