கரன்ட் கபாலி





‘‘உங்களுக்கு டென்ஷன் வந்தா கைதிங்களை அடிச்சு ரிலாக்ஸ் பண்ணிக்கறீங்க... எனக்கு டென்ஷன் வந்தா அடிச்சுத் துவைக்கறதுக்குத்தான் இந்த இன்ஸ்பெக்டர் பொம்மை செஞ்சு வச்சிருக்கேன் ஏட்டய்யா!’’

 ‘‘திருடப் போற இடத்துல தூங்கி, சத்தமா குறட்டை விட்டுத் தொலைச்சுடறேன்! எப்படியாவது சத்தத்தை நிப்பாட்டிடுங்க டாக்டர்...’’

‘‘சார்... கபாலியோட செல்போன், கம்ப்யூட்டர் எல்லாம் ரிப்பேராம்! புறா மூலம் மெசேஜ் அனுப்பி
யிருக்கான். மாமூல் தர இன்னும் ரெண்டு நாள் ஆகுமாம்...’’

‘‘ஹி... ஹி... பன்றிக்காய்ச்சல் சீசன் பாருங்க... அதான் சேஃப்டி ஏற்பாடு! சரி... சரி... மருவாதியா நகையெல்லாம்
கழட்டுங்க!’’

‘‘ஏன் ஏட்டய்யா! ராப்பிச்சை வர்ற நேரத்துல வராதீங்கன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். பாருங்க... வூட்டுக்காரி சோறோட வந்துட்டா!’’

‘‘இந்த பவர்கட்ல பத்து நிமிஷம் இருந்து திருடறதுக்குள்ள வீடு அனலா கொதிக்குது... எப்படிய்யா இருக்கீங்க? இந்தாங்க பணம்... நான் அடுத்த வாட்டி வர்றதுக்குள்ள இன்வெர்டர் போட்டு வை நைனா!’’