தத்துவம் மச்சி தத்துவம்





‘‘ஆழமா காதலிச்ச பொண்ணை ஏன் கைவிட்டே..?’’
‘‘என் செலவுல கன்னாபின்னான்னு சாப்பிட்டு அகலமாயிட்டே போறா...’’
- அ.ரியாஸ், சேலம்.

பெற்றோர்கள் செல்போன் மாதிரி; லவ்வர் சிம்கார்ட் மாதிரி; உறவினர்கள் பேலன்ஸ் மாதிரி. ஆனால் நண்பர்கள் பேட்டரி மாதிரி... என்னதான் செல்போன், சிம்கார்ட், பேலன்ஸ் எல்லாம் இருந்தாலும், பேட்டரி இல்லைன்னா ஸ்விட்ச் ஆஃப்தான்!
நண்பா... 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணி விடேன். என் ஃபிரண்டைப் போல யாரு மச்சான்?
- கே.கே.ரமேஷ், திருச்சி.

‘‘கட்சியில போதுமான நிதி இல்லைன்னு நினைக்கிறேன்...’’
‘‘எதை வச்சு சொல்றே..?’’
‘‘தலைவருக்கு ‘வறட்சிப்புயல்’னு பட்டம் தந்திருக்காங்களே...’’
- அதிரை புகாரி, அதிராம்பட்டினம்.

‘‘என்ன துணிச்சல் இருந்தா வெளி மாநிலத்துல இருந்து இங்கே திருட வந்திருப்பீங்க..?’’
‘‘இங்கேதான் கண்டபடி கரன்ட் போகுதாம்... அதனாலதான் வந்தோம் ஏட்டய்யா..!’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.

நல்ல ஆசிரியர்களால் நல்ல மாணவர்களை உருவாக்க முடியும்; நல்ல முதலாளிகளால் நல்ல தொழிலாளிகளை உருவாக்க முடியும். ஆனா நல்ல டாக்டர்களால் நல்ல பேஷன்ட்களை உருவாக்க முடியுமா?
- ஆஸ்பத்திரியிலிருந்து வெளியில் போகமுடியாத உள் நோயாளிகள் சங்கம்
- கே.ராமச்சந்திரன், சென்னை.

‘‘நம்ம தலைவர் பொதுக்கூட்டத்தில் பேசும்போது ஏன் கண்ணை மூடிக்கிட்டே பேசறாரு..?’’
‘‘எதிர்ல ஆட்களே இல்லாட்டியும் அப்பதான் அவரால பேச முடியும்!’’
- டி.சேகர், திருத்துறைப்பூண்டி.

பொண்ணுக்கு மாப்பிள்ளை எத்தாலியை வேணும்னாலும் கட்டலாம்: இத்தாலியைக் கட்ட முடியாது!
- தாலியை வைத்தும் ஜாலியாக விளையாடுவோர் சங்கம்
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.