வலைப்பேச்சு




தூங்குற சிங்கத்தக் கூட உசுப்பி விடலாம்; ஆனா தூங்குற கொழந்தைய தொடக்கூட செய்யாதீங்க.
அம்மாடி...
என்னா சவுண்டு விடுது!

- ஓம்பிரகாஷ் விஸ்வநாதன்

என் குழந்தையின் கன்னங்களுக்கு இட்ட முத்தங்களைவிட
என் செல்போனின் கன்னத்திற்கு இட்ட முத்தங்களே அதிகம்
# வளைகுடா நாடுகளில் தொலைந்த தகப்பன்
- ப்ரபீஸ்வரன்

பெரும்பாலும் மனைவியோட நம்பருக்கு மட்டும் தனியா ரிங்டோன் செட் பண்ணி வச்சுருக்கறது பாசத்துனாலயா... பாதுகாப்புனாலயா?
- ஆர்.சி.மதிராஜ்

வாலிப வயசுல எப்பவும் ஒரு பொண்ண விட இன்னொரு பொண்ணு பெட்டராத்தான் தெரியும். எப்போ ஒரு பொண்ண விட இன்னொரு பொண்ணு பெட்டரா தெரியலையோ, அப்போதான் உண்மையான காதல் ஆரம்பிக்குதுன்னு அர்த்தம்!
# கண்டுபுடிச்சிட்டோம்ல... ஆரு நாங்க?
- மொஹம்மத் முக்தர்

பேஸ்புக்லயே ஃப்ரீயா அக்கவுன்ட் தர்றான்... டாஸ்மாக்ல தர மாட்டேன்கிறான். இதையெல்லாம் ஏன் எந்த ஹீரோவும் தட்டிக் கேக்க மாட்டேங்கறாங்க:))
- தடாகம் வெப்

தன் பெற்றோரை இழிநிலைக்கு ஆளாக்கும் எந்தக் கொடியவனும், அவனை விடக் கொடுமையான ஒரு மகனை வளர்ப்பான்!
- ஜீவ கரிகாலன்



@thokkuchatti
இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு திருப்திகரமாக உள்ளது - பிரதமர்
# எசமான், அந்த ஒடிஸா எம்எல்ஏ   என்ன ஆனாருங்கோ?

@naanraman  
இரவில் கடவுளே நடந்து வந்தாலும், தெரு நாய்கள் அவரைப் பார்த்து குரைக்கத்தான் செய்யும்.

@Elanthenral  
மின்னல் மின்னும்போது அம்மாவை கட்டி அணைக்கும் குழந்தைக்குத் தெரிந்திருக்கிறது, ‘அம்மா அதை விட பெரிய சக்தி’ என்று!

@Kaniyen
கர்நாடகாவுக்கு ஒரு சொட்டு கூட தண்ணீர் தரமாட்டோம் - தாக்கரே
# தமிழ்நாட்டுக்கு  ஒரு சொட்டு கூட   தண்ணீர் தரமாட்டோம்னு சொன்ன சித்தராமையா எங்க?

@k7classic
மாநில அரசுகளை மத்திய அரசு மதிப்பதில்லை - ஜெ. குற்றச்சாட்டு
# டெல்லில ஒருத்தன் கூட கால்ல விழலியாம்!

@Kutty_Twits
வடைக்குப் பதில் 5 பவுன் நகையைத் தூக்கிச் சென்ற காக்கா... விரட்டிப் பிடித்த மக்கள்!   
# இதுக்குப் பேருதான் காக்கா புடிக்கிறதா?

@rghavan66  
சென்னை நகை அடகுக்கடை
உரிமையாளர் கொலை தொடர்பாக தகவல் கொடுத்தால் ரூ.25ஆயிரம் பரிசு
  # அதையும் நாங்கதான் கண்டு
பிடிக்கணுமா?

@karna_sakthi
ஒரு குருவியையும் விட்டு வைக்காமல் அழித்த அலைபேசியில் வெட்கமின்றி ‘ஆங்க்ரி பேர்ட்ஸ் ’விளையாடும் பெருமைமிக்க இனம் நம் இனம்.

@sheik007
பச்சை மொளகாயை மொத்தமாக மோரில் அரிந்து போடும் முன்பு அதை குடிப்பவனை சற்று எண்ணிப் பார்க்க வேண்டும் தாய்மார்களே:(

@Evanno_oruvan
தெளிவா இருக்கவன் மூஞ்சில கூட தண்ணியை தெளிக்குற ஒரே இடம், பார்பர் ஷாப்தான்#

@arivucs
தோனியைக்   கிண்டல் செய்யும் கலாசாரத்தை ஆரம்பித்தவர் மகாகவி பாரதி என்பது, ‘தோணிகள் ஓட்டி விளையாடி   வருவோம்’ என்ற பாடல் மூலம் தெளிவாகிறது!

@iLoosu
எப்பவும் கூடவே இருந்தா, மனைவி. எப்பவாவது இருந்தா கரன்ட். # தமிழ்நாடு

@iPorukki    
டாஸ்மாக்ல கூலிங் பீர் கேட்டதும் அவர் ஒரு நிமிஷம் சந்திரமுகியா மாறினத பார்த்தேன்...
 
@NiNaiVuGaL   
தற்கால மகிழ்ச்சிகளில் ஒன்றாகிவிட்டது எதிர்பார்த்த நேரத்திற்கு முன் வரும் மின்சாரமும்...

@erode_kathir
  தேர்வு எழுதும்போது ‘பிட்’ வழங்கப்படும் என சில தனியார் பள்ளிகள் இனி விளம்பரம் செய்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!

@Rocket_Rajesh
‘அனு’ஷ்காவின் போட்டோவைக் கூட ஆழ்ந்து ஆராய்வதால், நானும் ‘அனு’ விஞ்ஞானிதான்..!

@vandavaalam
பயங்கரவாதிகள் கொடூரமாக இருக்கின்றனர் - பிரதமர்
# ஓஹோ! நான்கூட பொட்டு வச்சிட்டு பொங்கல் சாப்பிடுவாங்கன்னு நெனைச்சிட்டிருந்தேன்.

@iamkarki  
கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கணவரைக் கொல்ல மனைவி முயற்சி.
# உங்க கையால அதே எண்ணெய்ல   வடை செஞ்சி தந்திருந்தா போயே சேர்ந்திருப்பான்!

@BalaramanL   
சில சமயங்களில் பெண்கள் ஆடையை சரி செய்ய கண்ணாடி தேவையில்லை... ஆண்களின் கண்களே போதும்!

@kaattuvaasi
அடக்கி வைக்காத பகையும், அடகு வைக்காத நகையும் ஆம்பிளைங்ககிட்ட இருந்ததா சரித்திரமே கிடையாது...

@Tottodaing
‘அரசியல் ஒரு சாக்கடை’ங்கிறாங்களே... அதுல இருக்குறவங்களுக்கு எல்லாம் பன்றிக்காய்ச்சல் வராதா?!
# டவுட்டு!