புலியின் பெயர் சிங்கம்...காரணம் நடிகர் சூர்யா!



புலியை, சிங்கம் என்று சொன்னால் யாராவது ஒப்புக்கொள்வார்களா?
சட்டீஸ்கர் மக்கள் ஒப்புக்கொள்கிறார்கள். சட்டீஸ்கரின் பிலாய் நகரில் உள்ள மைத்ரி பாக் மிருகக்காட்சிச் சாலையில் புதிதாகப் பிறந்துள்ள வெள்ளைப் புலிக் குட்டிக்கு ‘சிங்கம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

அஜய் தேவ்கன் நடித்து இந்தியில் வெளியான ‘சிங்கம்’ படம் சூப்பர் ஹிட் ஆனதால் புலிக்குட்டிக்கு இந்தப் பெயரை வைத்துள்ளனர். அஜய் தேவ்கனின் இந்த ‘சிங்கம்’ படம், ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த நம்மூர் ‘சிங்கம்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.ஆக, இந்த மிருகக்காட்சிச் சாலைக்கு வரும் பார்வையாளர்களை அதிகம் கவரும் மிருகமாக இந்தப் புலி (சாரி... சிங்கம்) இருக்கக் காரணம் நடிகர் சூர்யாதான்!

காம்ஸ் பாப்பா