800 கோடி!



ம்ஹும். இது ரூபாய் அல்ல; மக்கள் தொகை!

இந்த நவம்பர் மாதத்தில் உலகின் மக்கள் தொகை 800 கோடியை எட்டப் போகிறது என்கிறது ஐநாவின் கிளை அமைப்பான World Population Prospects 2022ன் ஆய்வறிக்கை.இதே வேகத்தில் போனால் 2030ம் ஆண்டில் 850 கோடியாகவும், 2050ல் 970 கோடியாகவும் உலகின் மக்கள் தொகை அதிகரிக்கும் என்று அறிவித்துள்ளது இந்த அமைப்பு.
சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மக்கள் தொகைப் பெருக்கம் குறைந்துகொண்டிருக்கும் நேரத்தில் இந்தியா, பாகிஸ்தான், காங்கோ, எகிப்து, எதியோப்பியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளில் மக்கள் தொகை மேலும் பெருகும் என்கிறது இந்த ஆய்வு.

கூடுதல் தகவலாக அடுத்த ஆண்டில் சீனாவின் மக்கள்தொகையை இந்தியா முறியடித்து, உலகிலேயே அதிக மக்கள் வாழும் நாடாக உருவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
உடனே இப்படியே போனால் என்ன ஆவது என அச்சப்பட வேண்டாம். ஏனென்றால் கடந்த 1950ம் ஆண்டு முதல் உலக மக்கள்தொகை ஒரு சதவீதத்துக்கும் கீழாகத்தான் அதிகரித்து வருகிறதாம். மக்களிடையே மலட்டுத்தன்மை அதிகரித்து வருவதே இதற்குக் காரணமாம்.

காம்ஸ் பாப்பா