வாக்கு வங்கி சரிவு!ரீடர்ஸ் கிளாப்ஸ்!

நடுப்பக்க ஒத்தக்கோடு, ஓசோனுக்கே போட்ட ரோடு. ஷாலு ஷம்முவைப் பார்த்ததுமே பின்னாலேயே ஓடு.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

ஆக்‌ஷன் கிங்கின் கதை அருமையாக இருந்தது. முப்பதாண்டுகளாக சினிமாவில் அர்ஜுன் இருந்தும், அவரைப் பற்றி நாங்கள் அறியாத தகவல்களைத் தொகுத்துக் கொடுத்தது அருமை.
- கே.நடராஜன், திருவண்ணாமலை.

டெல்லி தேர்தலில் இரு பிரதான தேசியக் கட்சிகளின் வாக்கு வங்கி பெரிதாக சரிந்துவிட்டதை சிம்பாலிக்காக மனம் திறந்து காட்டியிருக்கின்றன இந்தவார புளோ-அப்கள் அனைத்துமே.
- கே.கே.பாலசுப்பிரமணியன், கோவை.

சரோஜாதேவி பதில்கள் பக்கத்தில் இடம்பெற்றிருந்த திம்சு கட்டை பிரமாதம். அவரது பெயரைச் சொன்னால், என் பொது அறிவை வளர்த்துக் கொள்வேன்.
- கே.செல்வராஜ், வழுதரெட்டிப்பாளையம்

(‘புல்லுக்கட்டு முத்தம்மா’ படத்தில் ஹீரோயினாக நடித்த மினு குரியன்தான் அவர். உங்கள் பொது அறிவு வளர நாங்களும் காரணமாக இருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி - ஆசிரியர்)எம்.ஜி.ஆரையே ‘அங்கிள்’ என்று விளித்த நடிகை லட்சுமியின் ஆளுமையை தேவி எடுத்துச் சொன்ன விதம் மிகச்சரியே.
- வெ.லட்சுமிநாராயணன், வடலூர்.

கதாநாயகனாகி இருக்கும் கால்டாக்ஸி டிரைவர் கெவினின் கனவுகள் அனைத்தும் நனவாக ‘வண்ணத்திரை’ வாசகர்கள் சார்பாக வாழ்த்துகள்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

முன்னட்டையில் விஜய், பின்னட்டையில் மாளவிகா மோகனன் என்று ‘மாஸ்டர்’ ஃபீவரை இப்போதே
ஏற்படுத்தி விட்டீர்கள்.
- எம்.சேவுகப் பெருமாள், பெருமகளூர்.