கையாளுவது கடினம்!
சரோஜாதேவி பதில்கள்
 காய், கனியாக மாறுவதால்தான், உச்சரிப்பில் அது மருவி ‘கன்னி’ என்று ஆனதா? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. நாடே கொரோனா அச்சத்தில் பீதியடைந்து போயிருக்கும்போதுகூட மொழி ஆராய்ச்சியில் தீவிரம் செலுத்தும் உங்க ஆர்வம் கண்டு வியக்கிறோம்.
பாலிவுட் வாய்ப்புகளுக்காக தவம் கிடக்கும் தமிழ் நடிகைகள் ஏன் ஹாலிவுட் வாய்ப்புகளை ஒப்புக்கொள்வதில்லை? - முருகன், ஜலகண்டபுரம்.
முக்கால்வாசி துறக்க தயாராக இருப்பவர்கள், முற்றிலும் துறக்க அஞ்சுகிறார்கள் என்று அர்த்தம். முதலிரவுக்கு ஏன் பால், பழம் கொடுத்து அனுப்புகிறார்கள்? - வெ.லட்சுமி நாராயணன், வடலூர். பசிக்கும் என்பதற்காகத்தான்.
இந்தக்கால இளைஞர்கள் எல்லாவற்றையும் ரொம்ப பெருசாக எதிர்பார்க்கிறார்களே? - பி.சேக்கிழார், கோவிலம்பாக்கம். பாவம். கையாளுவது கடினம் என்பதெல்லாம் அனுபவப்பட்டால்தான் புரியும்.
வெயிலுக்கு உங்க சாய்ஸ் இளநீரா, பனம்பழமா? - கே.செல்வராஜ், வழுதரெட்டிப்பாளையம். என் சாய்ஸை விடுங்க. உங்க வாய்க்கு எது செட்டாகுதோ, அதுவே உங்க சாய்ஸா இருக்கட்டும்.
|