பேய்க்கு பயப்படாதே!
“பேயைப் பார்த்து யாரும் பயப்படக்கூடாது. அது நம்மோட அடுத்த பரிமாணம்” என்று புதிய கண்டுபிடிப்பை வெளிப்படுத்துகிறார் இயக்குநர் கார்த்தீஸ்வரன். ‘பேய்க்கு பயப்படாதே’ படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குவதோடு ஹீரோவாகவும் அவரே நடிக்கிறார். “பிளாக் காமெடி வகையில் இந்தப் படத்தை எடுத்திருக்கேன். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறும். குழந்தைகள் ரொம்ப ரசிப்பாங்க” என்று நம்பிக்கையோடு சொல்கிறார்.
கதாநாயகியாக காயத்ரி ரெமா அய்யர் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் முத்துக்காளை, நெல்லை சிவா மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘நெடுநல்வாடை’ மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜோஸ் பிராங்கிளின் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவு அபிமன்யு. படத்தொகுப்பு ஜிபி கார்த்திக்ராஜா.
- யுவா
|