ஜிலேபி மிக்ஸ்



தேவையான பொருட்கள்

சர்க்கரை - 200 கிராம், தண்ணீர் 150 மி.லி - சர்க்கரை பாகு செய்வதற்கு, ஜிலேபி மிக்ஸ் - 100 கிராம், தண்ணீர் - 110 மி.லி. பன்னீர் - 3 மி.லி., எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

100 கிராம் ஜிலேபி மிக்ஸ் உடன் 110 மி.லி. தண்ணீர் சேர்த்து அடர்த்தியாக (திக்காக) ஆகும் வரை நன்றாக கலக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நன்றாக சூடுபடுத்தவும். ஜிலேபி மாவை அந்த சூடான எண்ணெயில் வட்டமாக சுற்றியபடி பிழியவும். பொரிக்கப்பட்ட ஜிலேபிகளை அப்படியே எடுத்து தயார் செய்து வைத்திருக்கும் சர்க்கரை பாகில் விட்டு, 1-2 நிமிடம் ஊற விடவும். சுவையான ஜிலேபிகள் பரிமாற தயார். சர்க்கரை பாகு: 150 மி.லி. அளவு தண்ணீரில் 200 கிராம் சர்க்கரையை நன்றாக கலந்து அதை 5 முதல் 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.