முறுக்கு மிக்ஸ்தேவையான பொருட்கள்

ஆச்சி முறுக்கு மிக்ஸ் - 200 கிராம், நெய் - 2 தேக்கரண்டி, கருப்பு எள் - 1/4 தேக்கரண்டி, சீரகம் - 1/4  தேக்கரண்டி, தண்ணீர் - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை

முறுக்கு மிக்ஸ் உடன் நெய், கருப்பு எள், சீரகம் ஆகியவற்றை சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும். சம அளவுள்ள பகுதிகளாக இந்த மாவை பிரித்துக் கொள்ளவும்.  பின் முறுக்கு பிழியும் அச்சில் எண்ணெய் தடவி, முறுக்கு மாவை நிரப்பிக் கொள்ளவும். தேவையான வடிவில் பிழிந்து, சூடான எண்ணெயில் பொரிக்கவும். சுவையான முறுக்கு தயார்.