பஜ்ஜி போண்டா மாவு



தேவையான பொருட்கள்

பஜ்ஜி போண்டா மாவு - 200 கிராம், வாழைக்காய் (அ) பெரிய வெங்காயம் (அ) உருளைக்கிழங்கு துண்டுகள் - தேவைக்கேற்ப, தண்ணீர் - 200 மிலி, எண்ணெய் - தேவைக்கேற்ப அளவு.

செய்முறை

பஜ்ஜி போண்டா மாவை தண்ணீரில் கரைக்கவும். இத்துடன் வாழைக்காய், பெரிய வெங்காயம் அல்லது உருளைக்கிழங்கு இவற்றில் ஏதாவது ஒன்றை சிப்ஸ்களாக சீவி எடுத்துக் கொள்ளவும். காய் சீவலை மாவுடன் நன்கு துவட்டி எடுத்து சமையல் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான, சூடான பஜ்ஜி இப்போது தயார்.

இந்த மாவை உபயோகித்து காலிஃபிளவர் மற்றும் வெங்காய பக்கோடாவும் செய்யலாம். இதே மாவில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு சிறிது கெட்டியாக பிசைந்து உருண்டைகளாக எண்ணையில் பொரித்தால் போண்டா தயார்.