குலோப்ஜாமூன் மிக்ஸ்தேவையான பொருட்கள்

குலோப்ஜாமூன் மிக்ஸ் - 175 கிராம், தண்ணீர் - தேவையான அளவு,  நெய் / எண்ணெய் - தேவையான அளவு, சர்க்கரை - 700 கிராம்.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் 700 கிராம் சர்க்கரை மற்றும் சம அளவு தண்ணீர் சேர்த்து, 5-10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். சர்க்கரை பாகை தனியாக எடுத்துக் கொள்ளவும். 1 பங்கு குலோப்ஜாமூன் மிக்ஸில் 1/2 பங்கு தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் நன்கு பிசையவும். 5-7 நிமிடங்கள் கழித்து அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி கொள்ளவும்.

கடாயில் தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும். எண்ணெய் சூடானதும் மிதமான சூட்டில், செய்து வைத்த சிறு உருண்டைகளை பொன் நிறமாக பொரித்தெடுத்துக் கொள்ளவும். ஜாமூன்களை சூடான சர்க்கரை பாகில் 15-20 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். பின்னர் பரிமாறவும்.