செம்பா புட்டு மாவுதேவையான பொருட்கள்

செம்பா புட்டு மாவு - 500 கிராம், உப்பு, தண்ணீர், தேங்காய் துருவல் - தேவையான அளவு.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் செம்பா புட்டு மாவை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் தெளித்து கட்டிகள் இல்லாமல் நன்கு கிளறவும். 5 நிமிடங்கள் அப்படியே வைத்து விடவும்.  பிறகு புட்டு குழலில் தேங்காய் துருவல் மற்றும் புட்டு மாவுக் கலவை இரண்டையும் மாற்றி மாற்றி நிரப்பவும். மேல் மற்றும் அடிபாகம் இரண்டும் துருவிய தேங்காய் நிரப்பப்பட வேண்டும். நிரப்பிய பிறகு வேகும் வரை ஆவி கட்டவும். வாழைப்பழம், கடலை கறி அல்லது சர்க்கரையுடன் பரிமாறவும்.