மசாலா வடை மிக்ஸ்தேவையான பொருட்கள்

மசாலா வடை மிக்ஸ் - 1 கப், தண்ணீர் - அரை கப், நறுக்கிய வெங்காயம் - 1, நறுக்கிய இஞ்சி - 1, கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை

ஒரு கப் மசாலா வடை மிக்ஸில் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். அதோடு ஒரு நறுக்கிய வெங்காயம், நறுக்கிய இஞ்சி மற்றும் சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறவும். 10 நிமிடத்திற்கு பிறகு அவற்றை சிறு உருண்டைகளாக உருட்டி பிறகு தட்டையாக்கி கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். எண்ணெய் சூடானதும் வடையை பொன்னிறமாக
பொரித்தெடுக்கவும். தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.