கொழுக்கட்டை மாவுதேவையான பொருட்கள்

கொழுக்கட்டை மாவு -  500 கிராம், உப்பு, வெந்நீர், எண்ணெய் - தேவையான அளவு, பூரணம் - 200 கிராம்.

செய்முறை

கொழுக்கட்டை மாவுடன் தேவையான அளவு உப்பு கலந்து வெந்நீரை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பின்னர் உள்ளங்கையில் சிறிதளவு எண்ணெய் தடவி அதன்மேல் பிசைந்த மாவை வைத்து வட்டமாக தட்டிக் கொள்ளவும். அதில் பூரணம் வைத்து மடித்து நீராவியில் சுமார் 7-10 நிமிடம் வேக வைக்கவும். இப்போது சுவையான கொழுக்கட்டை பரிமாறத் தயார்.