நெல்லிக்காய் இனிப்பு பச்சடி



தேவையான பொருட்கள்

நெல்லிக்காய்த்துண்டுகள் - 1 கப், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், வெல்லத்தூள் - 1/2 கப், உப்பு, கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு, பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்.

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் நெல்லிக்காய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும். நெல்லிக்காய் வெந்ததும் வெல்லத்தூள் சேர்க்கவும். தேவையான தண்ணீர் சேர்த்து கொதித்ததும் இறக்கவும். காரமான குழம்பு சாதத்துக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.