பச்சை மிளகாய் பச்சடிதேவையான பொருட்கள்

பச்சை மிளகாய் - 1 கப், புளி கரைசல் - 1/2 கப், பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், உப்பு, கடுகு, கறிவேப்பிலை - தேவையான அளவு.

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் நறுக்கிய பச்சை மிளகாயை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும். பாதி அளவு வெந்தவுடன் புளி கரைசல், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். மிளகாய்த்தூள் சேர்த்து எல்லாம் ஒன்று கலந்ததும் இறக்கவும். பருப்புக் குழம்பு சாதத்துடன் சாப்பிட சுவை கூடும். வெள்ளை சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.