காரப்பூந்தி தயிர் பச்சடிதேவையான பொருட்கள்

காரப்பூந்தி - 100 கிராம், தயிர் - 1 கப், பச்சை மிளகாய் - 2, சாம்பார் வெங்காயம் - 10, எண்ணெய், கடுகு, உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு, சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்.

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும், பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். சாம்பார் பொடி சேர்த்து கிளறவும். ஒரு பாத்திரத்தில் தயிரை சேர்த்து அதனுடன் வதக்கிய கலவை, கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். பரிமாறும் நேரத்தில் அதனுடன் காரப்பூந்தியைக் கலந்து பரிமாறவும். தொட்டுக்கொள்ள என்றில்லாமல், ஒரு கிண்ணத்தில் போட்டு, ஸ்பூனால் எடுத்துச் சாப்பிடலாம்.